பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 17 S AASAASAAMMS SSAAAASA SAASAASSAAAAAAS AA SAASAASSAAAAA AAAAHAMAAAASASASS 'திருமலர் இருந்த முதியவன் போல' 1.5.2 திருமாதகம்: திருமாது = திருமகள்; அகம் = இருப்பிடம், திருமாதின் அகம் திருமாதகம். 1.5.3 சீதளம்: சீ = சீதேவி (இலக்குமி) - இ.சா. "சீ தளங்கொடு புயங்கை கொண்டார்' (கந்தர் அந்தாதி - 8) தளம் என்பதற்கு இடம் என்ற பொருள் உண்டு. இலை, பூ, இதழ் என்ற பொருள்களும் (சூடா.நி.) உண்டு. எரிவிரிந் தன்ன பல் தளத் தாமரை' (கல்லாடம் - 71-3) சீ (திருமகள்) இருக்கும் பூ, சீதளம் ஆகும். இதற்கு மற்று மொரு பெயர்க் காரணம் பின்னர்க் கூறப்படும். 1.5.4 பொன்மனை: பொன்-இலக்குமி, மனை= வீடு. இ.சா. சீவகசிந்தாமணி. 'பொன் துஞ்சு ஆகம் பொருந்திற் பொருந்துக'-(908). சிலப்பதிகாரம் - 19.61: - 'பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழிஇக் கொள்ள’’ பொன் இருக்கும் வீடு பொன்மனை (தாமரை) யாகும். 1.5.5 திருமால் கொம்பர் கொம்பர் என்றால் கொம்பு, மரஞ்செடிகளின் மெல்லிய கொடி போன்ற கழி - கோல் ஆகும். இ.சா. சீவக சிந்தாமணி - 2019. 'நாறு மலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்' கொம்புபோல் ஒல்லியா யிருக்கும் பெண்டிரை உவமையாகு பெயராய்க் கொம்பர்’ எனல் உண்டு. மற்றும், உயர்திணை விகுதி சேர்த்துக் கொம்பினர், கொம்பனார் எனக் கூறலும் உண்டு. இ.சா. கல்லாடம்