உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 மா தவம் புரிவாள் இன்றியமையாமை: மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகிய ஐந்தையும் மரம் (மர இனம்) என்ற பெயரில் அடக்கிக் கொள்ளல் வேண்டும். மரம் என்பது தனிப்பொருள் அன்று; பல உயிர் அணுக்களால் (Wood Cells) ஆனது அது. மரத்திற்கும் உயிர் உண்டு; அது ஒரறிவு உயிர் என்கிறார் தொல்காப்பியர். ஓர் அறிவு உயிர் மட்டுமா அது? அதற்குப் பால் (Sex) உணர்வு அறிவும் உண்டு. மக்கள் தொடக்கக் காலத்தில் முதல் முதலாகப் பயன் படுத்தியது மர இனமேயாகும். எனவே, அதைக் கண்டபடி சிதைக்கலாகாது. மரம் நடுதலின் இன்றியமையாமை இப்போது பெரிய அளவில் பேசப்படுகிறது. மரத்தால் கிடைக்கும் பயன் மிகப் பல. எனவே, 'மர இனப்பெயர் வைப்புக் கலை' என்னும் இந்நூலின் மூன்று பாகங்களையும் படித்ததன் பயனாக, அனைவரும் நிரம்ப மரம் வளர்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.