பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 19 ஒப்பு நோக்கற் பாலன. எனவே, தாமரைக்கு மாலின் நேத்திரம்' என்னும் பெயர் இயைவ தாயிற்று. 1.6.4 இராமப் பிரியம் திருமாலின் ஒரு பிறவி இராமன் ஆவான். இராம னாகிய திருமாலுக்குப் பிரிய மானவள் திருமகள். திருமகள் இருக்கும் தாமரை மலர்மேல் திருமால் பிரியம் கொள்வார். எனவே, தாமரைக்கு இப்பெயர் ஏற்பட்டது எனலாம். இதற்கு மற்றுமொரு பெயர்க் காரணம் பின்னர்த் தெரிவிக்கப்படும். 1.7 வாணியும் தாமரையும் வாணி என்றால் கலைமகள். திருமகள் இருப்பது செந்தாமரை. வாணியாகிய கலைமகள் இருக்கும் மலர் வெண்டாமரை. எனவே, வாணி மலர் (ஜூ) என்பது வெண்டாமரையைக் குறிக்கும். 1.8 ஞாயிறும் தாமரையும் தாமரைக்கு, வெயிலுந்தரவிந்தம் (ஜூ), எலி மனை (சா.சி.பி.). எல்லி மனை (பொ.ப.நூ.), சூரிய நட்பு (பொ.ப.நூ.), பனிக் கஞ்சி (சா.சி.பி.)- என்னும் பெயர்கள் ஞாயிறு சார்பால் சூட்டப்பட்டுள்ளன. 1.8.1 வெயில் உந்து அரவிந்தம் வெயிலுந் தரவிந்தம் ஆகும். வெய்யில் புறப்பட்டு உந்தியவுடன் தாமரை மலர் வதால் இப்பெயர் பெற்றது. அரவிந்தம் = தாமரை 18.2 எலி மனை, எல்லி மனை எல் என்பதற்கு ஒளி என்ற பொருள் உண்டு. இ.சா. "எல்லே இலக்கம்'- (தொல்-சொல்-266) எல் வளை' விளங்குகிற வளையல்'- (புறம்-24) இலக்கம் எனினும் ஒளி எனினும் ஒன்றே.