பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 21 மங்கையே உன் மணவாள னாகில் - அவன் வார்த்தை ஒன்றும் சொல்லிப் போகானோ?” ஆசை நிறைந்த உன் அண்ணலை நோக்கிட ஆயிரம் கண்களும் வேண்டு மோடி?’’ 'மஞ்சள் குளித்து முகம் மினுக்கி - இந்த மாயப் பொடிவீசி நிற்கும் நிலை கஞ்ச மகள்வந்து காணிற் சிரிக்குமோ? கண்ணிர் உகுக்குமோ? யார் அறிவார்!’’ என்று கவிமணி மிகவும் இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். அன்பன், மணவாளன், அண்ணல் என்னும் சொற்களால், சூரியகாந்தி மலரின் கணவனாகக் கதிரவனைக் குறிப்பிட்டுள்ளார். அவனை மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து, முகம் மினுக்கி, மாயப் பொடியும் மலர் வீசு கிறதாம். மஞ்சள் குளித்தல் என்பது மலரின் பொன் னிறத்தைக் குறிக்கும்; முகம் மினுக்கி என்பது, மலரின் பளபளப்பைக் குறிக்கும்; மாயப் பொடி வீசுதல் என்பது, மகரந்தப்பொடி தூவுதலை அறிவிக்கும். இந்தப் போட்டிக் காட்சியை, ஞாயிறின் மற்றொரு மனைவியாகிய - சூரியகாந்தியின் மாற்றவள் (சககளத்தி) ஆகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் சிரிக்குமாம் - அல்லது கவலையால் கண்ணிர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல்! சிரித்தல் என்பது மலர்தலையும், கண்ணிர் உகுத்தல் என்பது (கள் + நீர்) தேன் சொரிதல் என்பதையும் இயற்கையாகக் குறிக்கும். இந்த இறுதிப் பாடல், இரு பொருள் (சிலேடை) நயம் செறிந்ததாகும். சூரியகாந்திப் பூவுக்கும் தாமரை மலருக்கும் கதிரவனைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்காட்டிய பாடல்களால் அறியவரும்- மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,