பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மா தவம் புரிவாள் 'திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன்" (காப்பு-1) என்றும், சிவப்பிரகாச அடிகளார் திருவெங்கையுலாவில், 'செந்தாமரை நாதன் தேரில் பதாகையொடு நந்தா மதிற் கொடிகள் நட்பாட' - (40) என்றும் கூறியிருப்பதைக் கொண்டு, ஞாயிறுக்குத் தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்' என்ற பெயர்கள் உண்மையும் தெரியவரும். நாயகன் - நாதன் என்றால் கணவன் தானே! நம் புலவர்கள் திங்களை மட்டும் விட்டுவைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாகத் திங்களைக் (சந்திரனைக்) கூறி வைத்தார்கள். இதனை, ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே - உனக்கு அம்புயம்செய் தீங்கு எதுவோ வெண்ணிலாவே' (மலரும் மாலையும் - 46 வெண்ணிலா) என்னும் தேகிக விநாயகம் பிள்ளையின் பாடலாலும், 'காமக் கருத்தாக் குமுத நாதன் கங்குல் வரக் கண்டும்' என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் அறியலாம். திங்கள் ஆம்பலின் கணவனாம் - குமுத நாதனாம்! ஆனால், உண்மையில், ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியாது. கதிரொளியாலும், நில வொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! செஞ்ஞாயிறும் வெண்டிங்களும் புறப்படும் நேரத்தில் அல்லது - புறப்பட்டபின், வழக்கமாக மலர்கள் மலர்வதால், அவற்றை அம்மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபே காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே, கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும்