பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மா தவம் புரிவாள் எனவே, எலி மணை - எல்லி மனை (ஞாயிறின் மனைவி) என்னும் பெயர் உண்மையில் தாமரைக்குப் பொருந்தாது; அஃது ஒருவகை இலக்கிய மரபே என்பதை உணர்த்தவே இவ்வளவு கூறப்பட்டது. இப்பெயர் ஒரு வேடிக்கை விளையாட்டுப் பெயரேயாகும். 1.8.4 சூரிய நட்பு முருகேச முதலியார் தம் பொருட் பண்பு நூலில் எல்லி மனை என்னும் பெயரைக் கூறியிருப்பினும், உண்மையில் தாமரைக்கு ஞாயிறு கணவன் அல்லன் என்பதை அறிந்த அவர், தாமரைக்குச் சூரிய நட்பு என்னும் பெயரையும் கொடுக்கத் தவறவில்லை. குமுத நண்பன்' என்பது போல, தாமரைக்கு ஞாயிறு நண்பன் என்னும் பொருளில் சூரிய நட்பு' என்னும் பெயர் அமைந்துள்ளது. - 1.8.5 தந்தையும் தாயும் ஞாயிறைத் தாமரையின் தந்தையாகவும், தண்ணிரைத் தாமரையின் தாயாகவும் விவேக சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது: சங்கு வெண்டாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர்".-(13) என்பது பாடல் பகுதி. நிறத்தால் சங்கு போன்ற வெண்டாமரைக்குத் தந்தை ஞாயிறு (இரவி) ஆகும்-தாய் தண்ணிர் ஆகும் என நிரனிறைப் பொருள் கோளாகக் கொள்ள வேண்டும். தண்ணிரில் பிறப்பதால் தண்ணிர் தாயாகும்; ஞாயிறு வர மலர்வதால் ஞாயிறு தந்தையாகும். 1.9 பனிக் கஞ்சி தாமரைக்குப் பணிக்கு அஞ்சி' என்னும் ஒரு பெயர் தரப்பெற்றுள்ளது. முன்பணி பெய்யும் முன்னிரவிலும் சரி-பில் பணி பெய்யும் பின்னிரவிலும் சரி-அதாவது, கதிர்