பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 27 கூற்றை ஒத்துக் கொள்ள உடன்படாத உரையாசிரியர்கள், தம் திறமையைக் காட்டுமளவில் எப்படியெப்படியோ உரை யெழுதித் தீர்த்துள்ளனர். பழைய உரையாசிரியர்களின் உரைப் பகுதிகள் சில வருமாறு: பரிமேலழகர்: மலர்மிசை ஏகினான் = மலரின் கண்ணே சென்றவன். அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின் ஏகினான்’ என இறந்த காலத்தாற் கூறினார். இதனைப் பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர் மணக்குடவர்: மலர் மிசை ஏகினான் = மலரின்மேல் நடந்தான். பரிதியார்: மலர்மிசை ஏகினான் = பக்த சனங்கள்: இட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளியிருக்கும் சிவன். காலிங்கர்: மலர் மிசை யேகினான் = எல்லாருடைய நெஞ்சத் தாமரையினும் சென்று பரந்துள்ளான். இவை பழைய உரைப் பகுதிகள். இக்காலத்தார் எழுதிய உரைகள் பல உள. கி. பி. 1949-ஆம் ஆண்டு சனவரித் திங்களில் அடியேன் (சுந்தர சண்முகன்) எழுதி வெளியிட்ட திருக்குறள் உரையில் இப்பகுதி பற்றிய விளக்கம் வருமாறு: "மலர் மிசை ஏகினான் = பூவின்மேல் சென்றமர்ந் திருக்கும் கடவுள். கடவுள் எங்கும் இருப்பினும், மங்கலப் பொருளாகிய மலர், மலை முதலியவற்றில் விருப்பமாய்த் தங்கியிருப்பதாகக் கூறுவது வழக்கம். தம் மதிப்பிற்குரிய மங்கலப் பொருள்களில் கடவுள் அமர்ந்திருப்பதாக எண்ணு வது உயிர்களின் இயற்கைதானே! மற்றும், அன்பர்களின்