பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மா தவம் புரிவாள் மனத்தையும் மலராகச் சொல்லுவது உண்டு. குமரகுருபர அடிகளார், கலைமகளை நோக்கி, கலைமகளே! உன் திருவடியை வெண்டாமரையால்தான் தாங்க முடியுமா? என் வெள்ளை உள்ளமாகிய தாமரை மலரால் தாங்க முடியாதா?' என்று கேட்கும் கருத்தில், "வெண்டாமரைக் கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ளத் தண்டாமரைக்குத் தகாது கொல்லோ?’’ (சகல கலா வல்லி மாலை-1) என்று பாடியுள்ளார். மதுரைக் கலம்பகம் என்னும் தம் நூலிலும், விள்ளும் கமலம்' என மனத்தைக் குறித்து அதில் கடவுள் இருப்பதாகக் கூறியுள்ளார். எனவே, அன்பர்களின் மன மாகிய மலரில் தங்கியிருப்பவர் கடவுள் என்னும் கருத்தில் திருவள்ளுவர் கூறியிருப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.'- என்பது அடியேனது விளக்கம். 1949 ஆம் ஆண்டில் இதையெழுதிய அடியேன், 1965 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட 'தமிழ் அகராதிக்கலை’ என்னும் நூலில் பின் வருமாறு ஒரு கருத்து எழுதியுள்ளேன். 'திவாகர நிகண்டில், சமண சமயக் கடவுளாகிய அருகனுக்கு உரியனவாக நாற்பத்து மூன்று பெயர்கள் கூறப் பட்டுள்ளன. அவற்றுள், ஆதியங் கடவுள்-பகவன்-அற வாழி யந்தணன்-எண் குணன்-பூமிசை நடந்தோன்-என்னும் பெயர்களும் அடங்கியுள்ளன. இப்பெயர்கள் அருகனுக்கு உரியனவாகச் சூடாமணி முதலிய நிகண்டுகளிலும் சொல்லப்பட்டுள்ளன. இவை, திருக்குறள் கடவுள் வாழ்த்தி லுள்ள ஆதி பகவன் - மலர்மிசையேகினான் - அறவாழி யந்தணன் - எண் குணத்தான் - என்னும் பெயர்களோடு ஒத்துள்ளமை ஆராய்ச்சிக்கு உரியது. இதைக் கொண்டே, திருவள்ளுவர் ஒரு சமணர் என்று சிலர் கூறுகின்றனர்