பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாதவம் புரிவாள் சிவனுக்கும் அருகனுக்கும் உரியதாக நிகண்டுகளில் கூறப்பட் டுள்ள எண்குணன்' என்னும் பெயர் எண்ணத்தக்கது. திருக்குறளிலும் இடம் பெற்றுள்ளது இது. 1.10.5 எண்குணம் கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை' - (9) என்பது குறள். எண்குணம் பற்றிப் பரிமேலழகர் கூறி யிருப்பதாவது: 'எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், துரிய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பொரு ளுடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்ப முடைமை என இவை, இவ்வாறு சைவாகமத்துக் கூறப் பட்டது. அணிமாவை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப் பாரும் உளர்.' வைணவப் பரிமேலழகர், வடமொழி நூலில் உள்ள அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்னும் எண்குணங்களையும், சமண நூலில் கூறப்பட்டுள்ள கடையிலா அறிவு முதலிய எட்டுக் குணங்களையும் ஒத்துக்கொள்ளாமல், சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டுக் குணங்களையே ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்படி பார்க்கின், எண்குணன் சிவன் எனக் கருத்து கொள்ளவேண்டி வரும். மலர்மிசை ஏகினான் என்பவன் சிவன் எனக் கூறிய பரிதியார், பின்வரும் எண்குணங்களைக் கூறுகிறார். எட்டுக் குணத்தான்: எட்டுக் குணமாவன: அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த