பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகன்ர்ர் 35 2. வடிவால் பெற்ற பெயர்கள் 2.1 அட்ட தளம் அட்டம் = எட்டு; தளம் = இதழ்: எட்டு இதழ்களை யுடைய ஒருவகைத் தாமரை அட்ட தளம் (சா. சி. பி.) எனப்பட்டது. இது சினையாகு பெயராய்த் தாமரையைக் குறிக்கிறது. 2.2 சததளம் சதம் + நூறு நூறு இதழ்களையுடைய தாமரை சத தளம் (வை. மலை) ஆகும். இ. சா: மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்: 'தவள மலர்வரும் இளமினொடு சததளமின் வழிபடு தையலை' (2) கருத்து: வெண்ட்ாமரையில் வீற்றிருக்கும் இளைய கலைமகளோடு, நூறிதழ்த் தாமரையில் (சததளம்) விற் றிருக்கும் திருமகளும் வழிபடும் மீனாட்சியம்மை என்பதாகும். இங்கே சததளம் என்பது செந்தாமரை. இது சினையாகு பெயர். 2.3 சத பதுமம் நூறு இதழ்களையுடைய பதுமம். (பதுமம்-தாமரை) இப்பெயர் மலையகராதியில் உள்ளது. 2.4 சதபத்திரம் பத்திரம் என்பதற்கு இலை என்னும் பொருளேயன்றி, இதழ் என்னும் பொருளும் உண்டு. நூறு இதழ்களை உடையது சதபத்திரம். இஃதும் சினையாகு பெயர். இ. சா: விழைவுபடப் பொதி சதபத்திர வீ' (இரகு வமிசம்-நகர-16) (சதபத்திர வீ= சதபத்திரமுடைய வீ.வீ.-பூ)