பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 37 2.9 முண்டகம் முண்டகம் என்றால் முள். இ. சா: 'முண்டக விறும்பி னுற்று' (அரிச்சந்திர புராணம்-வேட்-36) முண்டகம் (முள்) உடையது முண்டகம். இ. சா: 'முண்டக வதனம் அழகெழ'- (திருவால-37.58) 2. 10 இண்டை இண்டு என்பது பொதுவாகக் கொடி வகையைக் குறிக்கும். இ.சா: 'இண்டு படர்ந்த மயானம்' (பதினோராம் திருமுறை ஓராண்டில் முப்பது அல்லது நாற்பது அடி நீளம் வளரக் கூடிய கிழங்குத் தண்டு தாமரைக்கு உண்டு. எனவே, நீளத்தில் மிக்கிருக்கும் கொடி வகையைச் சேர்ந்த தாமரைக்கு இண்டை (நிக.) என்னும் பெயர் பொருந்தும். இண்டு உடையது இண்டை. 2.11 தென்புறம் வட்டத் தாமரை என்னும் ஒரு வகைத் தாமரைக்குத் 'தென் புறம் (சா.சி.பி.) என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. தென் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு. இ.சா.: மதனன் தன் தென் னிர் உருவம் அழிய' . (தேவாரம்-1155-4) புறம் என்பது வெளித் தோற்றம். எனவே, அழகிய புறத் தோற்றம் உடையது தென் புறம்-தாமரை. தென் என்ப தற்கு இனிமை என்னும் பொருளும் உண்டு. இ சா: தென்னிசை பாடும் பாணன்' (திருவாலவாயுடையார் திருவிளையாடல்-56-7)