பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 39 3.4 மஞ்சள் தாமரை "GøvTLL–6v 2.Güst GUIfl56jt #l6vlh" (Land of Lotos Eaters) என்னும் தீவு பற்றியும் அதில் கிரேக்கப் படை மறவர்கள் தங்கியது பற்றியும் பொன்னாங் கண்ணியைப் பற்றிய கட்டுரையில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அந்தத் தீவில் உள்ள தாமரை மலர்கள் மஞ்சள் நிறம் உடையனவாம். இதனை, லார்டு டென்னிசன் (Lord Tennyson) (g)u) fösó)uu “The Lotos-Eaters" gTgörgYub List Lodi, a cites: “And the yellow down, Border'd with Palm' என்னும் (3ஆம்) பாடல் பகுதியில் அறியலாம். 4. பண்பால் பெற்ற பெயர்கள் 4, 1 சீதளம் சீ = திருமகள், எனவே திருமகள் இருக்கும் இடம் சீதளம் என்னும் ஒரு பொருள் முன்னர்த் தரப்பட்டுள்ளது. சீதளம் என்பதற்குக் குளிர்ச்சி என்னும் பொருளும் உண்டல்லவா? தாமரை குளிர்ச்சி தரும் பொருளாதலால் சீதளம் (நி) என்னும் பெயரைப் பண்பு காரணமாகப் பெற்ற தெனவும் கூறலாமன்றோ? பொருட் பண்பு நூலில் தாமரையின் தன்மை சீதம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியர் குண பாட நூலில் உள்ள கண்ணுக்கு ஒளிகொடுக்கும் காசபித்தம் போக்கும் எண்ணும் குளிர்ச்சிதரும் ஏந்திழையே - புண்ணுகளில் தூமரைப் புண்ணும் போக்கும் தொந்திக் கடுப்பகற்றும் தாமரைக் கந்தமது தான்' என்னும் பாடலில் 'எண்ணும் குளிர்ச்சி தரும்' - தொந்திக் கடுப்பு (வயிற்றுக் கடுப்பு) அகற்றும் - என்று கூறப்பட்டிருப்பது காண்க. ஈண்டு இப்பெயரைப் பண்பாகு பெயராகக்;கொளல் வேண்டும்.