பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மா தவம் புரிவாள் 4.2 அற்ப கந்தம் அற்ப கெந்தம் என்னும் பெயர் மு.வை. அகராதியிலும், அற்ப கந்தக் கொடி என்பது சி.வை. அகராதியிலும் தரப் பட்டுள்ளன; செந்தாமரை என்றும் பொருள் தரப்பட் டுள்ளது. அற்ப கந்தம் அல்லது கெந்தம் என்றால், சிறிதளவு மனமே உடையது என்று பொருளாம். சில மலர் கட்கு இருப்பது போல் செந்தாமரை அவ்வளவாக மிக்க மணம் உடையதன் றாதலின் இப்பெயர் பெற்றது. இஃதும் பண்பாகு பெயரே. - 4.3 விஷ புட்பம் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ள விஷபுட்பம்’ என்னும் பெயரின் பொருத்தம் என்னவோ! இதனைச் சினையாகு பெயராகக் கொளல் வேண்டும். 4.4 இராமப் பிரியம் இராமம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு. இ.சா.: இரகுவமிசம் - தேனு-17 மெய்ப்பொலி இலங்கொளி இராமம்' தாமரை தன் தோற்றப் பொலிவால், காண்பவர் கண்கட்கு அழகும் கவர்ச்சியும் உண்டாக்கி, மேலும் காணும் பிரியத்தை (விருப்பத்தை) உண்டாக்குவதால் இராமப் பிரியம் (சா.சி.,பி.) என்னும் பெயர் கொடுக்கப்பட்டதாகவும் கூறலாம். இது பண்பாகு பெயர். 4.5 இரதி காந்தள் இரதி என்பதற்குப் புணர்ச்சி என்னும் பொருள் உண்டு. இ.சா.: 'இரதி வேட்கையிற் பொருதனர்' (செவ்வந்திப் புராணம் - தாயான-(11)