பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மா தவம் புரிவாள் சிவன் பெயர்கள் அதற்கு அளிக்கப்பட்டுள்ளமையைக் குப்பை மேனிக் கட்டுரையில் காணலாம். ஆனால், தாமரை வெப்பம் தராதது - குளிர்ச்சி தருவது என்னும் செய்தி இக்கட்டுரையில் மேலே கூறப்பட்டுள்ளது. திருமால் எடுத்த மோகினிப் பெண் வடிவோடு சிவன் உடலுறவு கொண்டதால் கையனார் பிறந்தார் என்பது புராணக் கதை. எனவே, திருமாலைச் சிவனுக்குச் சத்தி யாக - மனைவியாகக் கூறுவது சைவர்கள் சிலரின் மரபு. எனவே, சிவனது நெருப்பு வெப்பத்தைக் கொள்ளாமல், சத்தியாகிய திருமாலைச் சிவனிடமிருந்து பகிர்ந்து (பிரித்து) அத்திருமாலின் தன்மையாகிய குளிர்ச்சியைக் கொண்டது தாமரை: ஆதலின் இப்பெயர் பெற்றது எனக் கூறலாம். திருமால் நீர்க்கடவுள்; தாமரை நீரோடு நெருங்கிய தொடர்புடையது - என்னும் செய்திகளை ஈண்டு மீண்டும் நினைவுகூர வேண்டும். இப்பெயர்க் காரணப்படி பார்த்தால், இப்பெயர் சார்பினால் பெறப்பட்டது எனக் கொள்ளல் வேண்டும். மேலும், இப்பெயரில் ஒரு சொல் விளையாட்டு செய்து பார்க்கலாம். 5.1.1 சொல் விளையாட்டு உலகில் உயிர்கள் அனைத்திலும் ஆணும் பெண்ணும் இருக்கக் கண்ட நம் முன்னோர் சிலர், கடவுளை ஆணாக்கு வதா அல்லது பெண்ணாக்குவதா - என்று எண்ணிப் பார்த்தனர்; கடவுளை இரண்டுமாக ஆக்கிக் காண்பதே சரி என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி, சிவனாகிய கடவுளின் வலப்பக்கம் ஆண்வடிவம் என்றும், இடப்பக்கம் பெண் வடிவம் என்றும் கூறலாயினர். வலப்பக்கம் சிவன்; இடப் பக்கம் உமாதேவி. எனவே, சிவன் பெண்ணை ஒரு பாகத்திலே உடையவன் என்னும் கருத்தில், மாதொரு பாகன், தையல் பாகன், மங்கை பாகன், நாரி வாகன்,