பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகன்ார் 45 'பூவெனப் படுவது பொறிவாழ் பூவே (40) (நால்வர் நான்மணிமாலை) என்னும் இலக்கியப் பகுதிகள் தக்க சான்றாகும். அதே நேரத்தில், தாமரையில் உள்ள பழுதுகளையும் நோக்க வேண்டும். சில பழுதுகள் (குறைபாடுகள்) வருமாறு: 5.2.2 பழுதுகள் 1. சேற்றில் தோன்றியிருத்தல். 2. மாலையில் குவிந்து விடுதல். 3. பனியில் மலராமையால் பனிக் கஞ்சி' என்னும் பெயர் பெற்றிருத்தல். 4. மற்ற நீர்ப் பூக்களைப் போல் இல்லாமல், பூவின் இதழ்கள் உதிர்தல். 5. குறைந்த மணம் உடையதாகி "அற்ப கந்தம்' என்னும் பெயர் பெற்றிருத்தல். 6. விஷ புட்பம் என்னும் பெயர் பெற்றிருத்தல். 7. இலைக் காம்பில் முள் இருத்தல். 8. இலை உடம்புக்குத் தீமை பயத்தல். முதலியவை தாமரைக்கு உள்ள குறைபாடுகளாம். இலையின் தீமை பற்றிக் காண்போம்: தாமரை இலையில் உணவு இட்டு உண்டால், உடம்புக்குக் கொடிய வெப்பம் தரும்; வளி நோய் (வாயு) மிகும்; பசித் தீ குறைந்து மந்தம் உண்டாகும்; திருமகள் தங்காள் வறுமை உண்டாகும். இக் கருத்துக்களை யுடைய அகத்தியர் குணபாடப் பாடல் வருமாறு: " தாமரைப் பன்னத்தில் உண்டால் தாங்கரிய உட்டிண மாம்; நாம வாதம் சினந்து நண்ணுங்காண்-துாம முறா