பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தெருவில் அழகி 1. இடத்தால் ஏற்பட்ட பெயர்கள் 1.1 தெருவில் அழகி தெருவிலே அழகிகள் பலர் செல்லலாம். ஆனால், தெருவிலே, குறிப்பிட்ட இடங்களிலே அழகிகள் நிலையாய் இருபத்து நான்கு மணி நேரமும் நின்றுகொண்டிருக்க முடியுமா? நின்றுகொண்டிருக்க முடியும் என்ற பதில் குப்பைமேனிச் செடியின் வாயிலாகக் கிடைக்கிறது. பார்ப்பதற்கு மேனி (வடிவம்) அழகாக உள்ள ஒரு வகைச் செடி குப்பையிலே செழித்து வளர்கிறது. இதனால் இது குப்பை மேனி என்னும் பெயர் பெற்றது. இதற்குத் "தெருவில் அழகு (அழகி) என்னும் பெயர் மூலிகை வைத்திய அகராதியில் வழங்கப்பட்டுள்ளது. 1.1.1 தெருவும் குப்பையும் குப்பைக்கும் தெருவுக்கும் என்ன தொடர்பு என்ற ஐயம் எழலாம். இங்கேதான் இந்தியாவின் பெருமை (?) இருக்கிறது. இந்திய நாட்டுச் சிற்றுார்களில் மட்டு மன்று - பேரூர்கள் சிலவற்றிலுங் கூட, அன்று மட்டு மன்று - இன்றுங்கூட, தெருவிலே குப்பை கொட்டி வைக்கும் வழக்கம் இருக்கிறது. புதுச்சேரியைச் சேர்ந்த நாராயணசாமி என்னும் அறிஞர் ஒருவர், இன்றைக்கு ஏறத்தாழ எழுபது ஆண்டு