பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மர் தவம் புரிவாள் கட்கு முன், பிரான்சு நாட்டிலே, பாரிசு தலைநகருக்கு முந்நூறு கல் தொலைவு அப்பால் உள்ள ஓர் ஊரிலே படித்துக் கொண்டிருந்தாராம். ஒரு நாள், தாம் தங்கி யிருந்த இடத்திலிருந்து புறப்பட்டுத் தெருவழியே கல்விக் கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தாராம்; வழியில் அஞ்சல் காரர் (Post-man) ஒரு கடித உறையை இவரிடம் தந்தாராம். இவர் அந்த உறையின் நுனிப் பகுதியைக் கிழித்தெடுத்து அந்தத் துண்டுத் தாளைக் கீழே எறிந்துவிட்டு மடலைப் படிக்கத் தொடங்கினாராம். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த பிரெஞ்சுக்கார அம்மையார் ஒருவர், இவரை நோக்கி, சிறு தாளையும் கீழே எறியலாகாது - அதோ இருக்கும் தொட்டியில் போட வேண்டும் - என்று கூறி, அந்தத் துண்டுத் தாளை அவரே எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றாராம். இந்த நிகழ்ச்சியை, அறிஞர் நாராயணசாமியே என்னிடம் கூறினார். இது நடந்தது, எழுபது ஆண்டுகட்கு முன்பு - பாரிசு தலைநகருக்கு வெகு தொலைவில் உள்ள ஓரிடத்திலாகும். இந்த நிலைமையோடு, நம் இந்திய நாட்டுத் தெருக் குப்பைமேடுகளை ஒத்திட்டு நோக்குங்கால் நாணத்தால் தலை கவிழ்கிறது. 1.1.2 அமைதி இதற்கும் ஓர் அமைதி கூறப்படுகிறது. வயலுக்கு உணவாக எரு இடவேண்டும். குப்பை கூளங்களைச் சேர்த்து வரின், அவை மக்கி நல்ல எரு உரமாகும். அந்த உரத்தை வயலில் இடின் நன்றாக விளையும். அதனால் மக்கள், தம் வீட்டுத் தோட்டத்தில் சேர்க்கும் குப்பையே யன்றி, தெருவிலும் தத்தம் வீட்டிற்கு எதிரே குப்பை சேர்த்து வந்தார்கள். அந்தக் குப்பைமேடு நல்ல உரம்