பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர். சண்முகனார் 51 உள்ளதாதலின், அதில் முளைக்கும் செடி நல்ல மேனி (வளம்) கொண்டு செழித்து வளர்கிறது; இதனால் இதற்குக் 'குப்பை மேனிச் செடி" என்று பெயர் வைக்கப்பட்டது. அன்றியும், இச்செடி வளமான உரத்தினிடையே விளைதலின் பார்ப்பதற்குத் தள தள' என அழகாய்த் தோன்றுகிறது. அதனால் இதற்குத் தெருவில் அழகி" என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. அடுத்து. எடுத்துக் கொண்ட பெயர்க் காரணங்களை விளக்கக் குப்பையின் வரலாற்றை ஒரு சிறிது ஆய்வு செய்ய வேண்டும். 1.1.3 குப்பையின் வரலாறு தொடக்கக் காலத்தில் மக்கள் குப்பையைச் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படவில்லை. கழிவுப் பொருட்களைக் கண்ட இடங்களில் கண்டபடி போட்டு வந்தார்கள். பிறகு வீட்டுப் பின்புறத் தோட்டத்தையும் வீட்டின் எதிர்ப் புறத் தெருப் பகுதியையும் துடைப்பம் கொண்டு தூய்மை செய்யத் தொடங்கியபோது, இறைந்து கிடக்கும் குப்பைகளை ஒரிடத்தில் கூட்டினார்கள். இந்நிலை வளர வளர, பன்னாளாய்க் குப்பை கூட்டப் பட்ட இடங்களிலேயே கழிவுப் பொருட்களைப் போடத் தொடங்கினர். மாட்டுச் சாணமும் இடம் பெற்றது. கழிவுப் பொருட்களின் கூட்டம் குன்றுபோல் குவியலா யிற்று, குப்பைமேடு உருவாயிற்று. குப்பை மேட்டில் இயற்கையாகச் செடிகள் முளைக்க லாயின. வேறிடங்களில் முளைக்கும் செடிகளினும், குப்பைகள் மக்கி மடிந்து கிடக்கும் குப்பை மேடுகளில் முளைக்கும்