பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மா தவம் புரிவாள் செடிகள் வளமாகவும் அழகாகவும் நல்ல மேனியுடனும் காணப்பட்டன. குப்பைமேட்டில் நல்ல மேனியுடன் காணப்பட்ட செடி வகைக்குக் குப்பைமேனி என்று பெயரிட்டனர். குப்பைமேட்டில் விளையும் செடிகள் செழிப்பாயிருப்பது மக்களின் எண்ணத்தைக் கிளறலாயிற்று. இந்தக் குப்பையை வயலில் போட்டாலும் வயல் நன்கு விளையும் என உணர்ந்தனர். அங்ஙனமே வயலில் இட்டனர் - நற்பயன் கண்டனர். பின்னர்க் குப்பையைக் கண்ணுங் கருத்துமாய்ச் சேர்க்கத் தொடங்கினர். மணல்மேடென, கல்குன்றெனக் குவியல் குவியலாய்க் குவிக்கத் தொடங்கினர். குப்பையின் மதிப்பு உயர்ந்தது. நிலம் இல்லாரின் வீட்டுக் குப்பைகளையும் நிலம் உள்ளவர் விலை கொடுத்து வாங்கத் தொடங்கினர். இந்நிலையில், நிலம் இல்லாதவரும், ஒரு வாணிகப் பொருள்போலக் குப்பையைக் குவிக்கத் தொடங்கினர். இந்நிலையில் குப்பை பணமாயிற்று - படிப்படியாக ஒரு வகைச் செல்வமாகக் கருதப்படலாயிற்று - மிகவும் இன்றி யமையாத பொருளாக மதிக்கப்பட்டது. ஒருபலம் மண், கால்பலம் மண்ணாகும்படி நிலத்தை உழுது உழுது ஞாயிற்றொளி படச்செய்து காய வைத்தால், ஒருபிடி எருவும் போடாமலேயே நிலம் மிகுதியாக விளையும். அந்த அளவுக்கு ஏர் உழ முடியாதவர்கள் எரு இடுதல் நல்லது என்று திருவள்ளுவர் கூறலானார். தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்' (1037)