பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மா தவம் புரிவாள் கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம்புரிந்த வாறே மிகும்' கருத்து: காலையிலேயே போதிய அளவு தானியக் கப்பிகளைத் தீனியாக வாயிலிட்டு நிரப்பி விட்டாலும் கோழி இழிந்த குப்பையைக் கிளறுதலை நிறுத்தாதவாறு போல், உயர்ந்த நூற்கருத்துக்களை உரைத்து நல்லறிவு புகட்டினும் கீழ் மக்கள் தம் மனம் விரும்பியவாறு தீய வழியில் மேற்செல்வர். பெருங்கதை-3 மகதகாண்டம்-14 நலனாராய்ச்சி 'சூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின் மயிரும் சிறகும் செயிரறக் கழிஇக் கோல்நெய் பூசித் தூய்மையுள் நிறீஇப் பாலுஞ் சோறும் வாலிதின் ஊட்டினும் குப்பை கிளைப்பு:அறாக் கோழி போல்வர் மக்க ளென்று மதியோ ருரைத்ததைக் கண்ணிற் கண்டேன்." (108-114) கருத்து: உயர்ந்தோர் உரையைக் கேளாத கீழ் மக்கள், கொண்டையோடு முகத்தைச் செம்மை செய்து-நறுமண நீரால் மயிரையும் இறக்கைகளையும் அழுக்கு போகக் கழுவி-கோலினால் உடம்பின் மேல் நெய் தடவி-தூய்மை செய்து-உயர்ந்த பாலும் சோறும் வாயில் ஊட்டி விடினும், குப்பை கிளறுதலை நிறுத்தாத கோழி போன்றவராவர். 'நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் விட்டாலும் வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னப் போகும்' என்னும் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேற் காட்டியுள்ள இரு பாடல்களால், குப்பையின் அருவருப்பான இழிவு புலப்படும். கோழிப் போரைக்