பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 57 இறால்மீன் குவியலுக்கு: 'சுற்றிய பிணர சூழ்கழி இறவின் கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கி' (நற்றிணை - 101-2,3) இறவின் கணங்கொள் குப்பை = இறால் மீனின் கூட்டம் கொண்ட குவியல், குப்பை என்னும் சொல்லுக்கு, கணம் - கூட்டம் என்னும் பொருள் உண்மை இதனால் புலப்படும். உப்புக் குவியலுக்கு: 'உவர்விளை உப்பின்குன்றுபோல் குப்பை (நற்றினை 138-1) பாக்குக் குவியலுக்கு: பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும்' (பெருங்கதை - 2-2.72) பளிக்காய்க் குப்பை = பச்சைக் கருப்பூரம் விரவிய பாக்கின் தொகுதி. அகிலின் குவியலுக்கு: யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்' (சிலம்பு. 25-37) சந்தனக் குவியலுக்கு: சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் (சிலம்பு 26.168) இரத்தினக் குவியலுக்கு, மரக்களி யன்ன திருத்தகு பொன்னும் இரத்தினக்க் குப்பையும் இலங்கொளிப் பவழமும்' (பெருங்கதை. 2.14, 68 & 69) பல்வேறு உயர்ந்த செல்வப் பொருள்களின் குவியலுக்கு: கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை' (சிலம்பு, 6-121)