பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மா தவம் புரிவாள் 'விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோடு' (மணிமேகலை. 16-122 & 123) கொழுநிதி, விழுநிதி என்னும் அடைமொழித் தொடர்கள் இவண் குறிப்பிடத் தக்கன. பெயர்க் காரண விளக்கத்திற்குப் பயன்படலாம் என்னும் நோக்கத்தாலும், தொடர்புடைய வாய்ப்பு நேர்ந்த தாலும், இங்கே குப்பையின் வரலாறு கொடுக்கப்பட்டது. குப்பை தெருவில் கொட்டிக் குவிக்கப்பட்டதன் காரணம் தெரிய வரும். இந்தக் குப்பையின் வளத்தால் அதன்மேல் செழித்து மேனியுடன் வளரும் செடிக்குத் தெருவில் அழகி" என்னும் பெயர் வைக்கப்பட்டதன் பொருத்தமும் இப்போது புலனாகும். 1.2 சாணக்கி மேனி 1.2.1 சேர்ப்பு உரம் கண்டகண்ட கழிவுப் பொருள்கள் - குப்பைக் கூளங்கள் ஆகியவை நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இந்த உரத்திற்குச் சேர்ப்பு உரம் (Compost) என்று பெயராம். 1.2.2 தொழு உரம் மாடுகளின் சாணம், மாட்டுச் சிறுநீர் கலந்த வைக்கோல் முதலிய கழிவுகள் நிலத்திற்குச் சிறந்த உரம் ஆகும். இது தொழு உரம் (Farmyard manure) எனப்படும். மாட்டுத் தொழுவத்தில் உண்டாகும் உரம் ஆதலின் தொழு உரம்' எனப்படுகிறது. தொழு, தொழுவம், தொழுவறை என்பவற்றிற்கு மாட்டுக் கொட்டில் என்று பொருளாம். முறையே இலக்கியச் சான்றுகள் வருமாறு: