பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மா தவம் புரிவாள் இந்தச் சான்றுகளால் சாணம், சாணகம் என்பன ஒரு பொருட் சொற்கள் என அறியலாம். எனவே, சாணகம் நிறைந்த குப்பை மேட்டைச் சாணக்கி' என்று கூறலாம். அந்தச் சாணக்கியில் வளரும் மேனிச் செடி சாணக்கி மேனி' எனப்படும். இது சா.சி.பி. அகர முதலியில் உள்ளது. தெருவில் அழகி, குப்பை மேனி, சாணக்கி மேனி என்பன இடத்தால் பெற்ற பெயர்களாகும். 2. வடிவால் வந்த பெயர்கள் 2.1 இனி, மேனி என்னும் சொற்பொருள் பற்றிச் சிறிது காண்போம். மேனி என்னும் சொல்லுக்கு, உடம்பு, வடிவம், நிறம் என்ற பொருள்கள் உண்டு. இலக்கியச் சான்றுகள்: உடம்பு-(சிலம்பு-8-68 & 69) 'பசந்த மேனியள் படருறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்' வடிவம்-(பிங்கலம்) விக்கிரகம், பிண்டம், மேனிபூட்சி, தாபரம், புற்கலம், உடம்பே' (994) :படிவம், உருவம், சட்டகம், மேனி, வண்ணமும் ஆகும் வடிவின் பெயரே' (995) நிறம்-(திருமுருகாற்றுப்படை-144) - மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர்' . நச்சினார்க்கினியர் உரை: மாவினது விளங்குகின்ற தளிரை யொக்கும் நிறத்தினை யுடையராய்' மற்றும் மேனி என்பதற்கு, அழகு, உயர்வு, சிறப்பு, தெய்வத்தன்மை, பொலிவு, நல்ல நிலைமை, மிகுதி முதலிய பொருள்களும் உண்டு.