உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர், சண்முகனார் 61 கடவுள் சிலையினையும் உயர்ந்தவர் உடம்பினையும் 'திருமேனி' என்று குறிப்பிடுவது மரபு. நெல் முதலிய பயிர்வகை, பொலிவுடன் வளமாய்க் காணப்படினும், விளைச்சல் மிகுதியாயிருப்பினும், பயிர் மேனி கண்டிருக் கிறது' என்று கூறுவது மக்கள் மரபு. 2.2,3,4 திருமேனி-திருமேனி அழகி குப்பையில் மேனியுடன் வளரும் செடிக்குச் சங்கத்து அகராதியில் திருமேனி' என்னும் பெயரும், மூலிகை வைத்திய அகராதியில் திருமேனி அழகி" என்னும் பெயரும் சி.வை. அகராதியில் திருமேனிச்செடி, திருமேனி அழகிச் செடி, மேனியிலைச் செடி என்ற பெயர்களும் கொடுக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பெயர்கள் வடிவால் வந்தவை. 2.5,6,7 மேனி-பத்திரி-கண்டன் மூலிகை வைத்திய அகராதி, எந்த அடைமொழியும் இன்றி, மேனி என்னும் தனிச் சொல்லாலேயே குப்பை மேனியைக் குறிக்கிறது. அந்த அளவுக்கு மேனி பெயர் பெற்றுள்ளது, திருமேனி பத்திரி (பத்திரம் = இலை; இலையுடையது பத்திரி), திருமேனி கண்டன்' (அழகிய உடலுறுப்பு உடையவன்) என்னும் பெயர்களும் இப் பொருளின் அடிப்படையில் எழுந்தனவே. 2.8 காந்திமெய் - தேரையர் பாடலில் காந்தி மெய் என்னும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி என்றால் ஒளி-பளபளப்புபிரகாசம் - என்று பொருளாம். மெய் = உடம்பு. பள பளப்பான மெய் (மேனி) உடையது என்னும் பொருளில் இந்தப் பெயர் தரப்பட்டுள்ளது. இது வடிவால் வந்த பெயர் அன்றோ!