பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மர் தவம் புரிவாள் 3. நிறத்தால் பெற்ற பெயர்கள் 3-1 & 2 மயிலம் மயில மேனி வை.ம. அகராதியில் மயிலம்' என்னும் பெயரும் சி'வை: அகராதியில் மயில மேனிச்செடி என்னும் பெயரும் சா. சி. பி. அகர முதலியில் மயிலை மேனிச்செடி என்னும் பெயரும் குப்பை மேனிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மயிலம்-மயிலை என்னும் சொற்கட்கு வெளிர் கறுப்பு அதாவது வெண்மை கலந்த கருநிறம்என்னும் ஒரு பொருள் உண்டு. இப்பொருளிலேயே இப்பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்நிற முள்ள மாடு, மயிலை, மயிலக் காளை என்று கூறப்படும் உலக வழக்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஆனால், குப்பை மேனிச் செடியைப் பார்த்தால் பச்சை நிறமாக உள்ளது. ஆனால் அழுத்தமான பச்சை நிற மன்று-மெல்லிய பச்சை நிறமே; அதாவது வெண்மை கலந்த பச்சை நிறம்என்று சொல்லலாம். உண்மை யிவ்வாறு இருக்க, வெண்மை கலந்த கருநிறம் என்னும் பொருள் உடைய மயிலை-மயிலம் என்னும் சொற்களால் குறிப்பது எவ்வாறு பொருந்தும்? என்ற வினா எழலாம். இங்கே, யங், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோரின் நிறம், ஒளி, பார்வை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்குச் செல்லாமல், இலக்கிய மரபை ஒட்டியே பொருள்கண்டு கருத்து கொள்ளல் வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பச்சை, நீலம் - கறுப்பு ஆகியவற்றை மயங்கிச் சொல்வதுண்டு. எடுத்துக்காட்டாக, திருமாலின் நிறம் பற்றிக் காணலாம்: திருமால், பச்சை நிறத்தர்-நீல நிறத்தர்-கருநிறத்தர் என்ற மூவகைப் பெயர்களாலும் சுட்டப்படுகிறார், இலக்கியச் சான்றுகளாவன: