பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 69 1. பச்சை: திவ்யப் பிரபந்தம்-873: 'பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே!' 2. கருமை: க. ரா. பால காண்டம்-கையடைப் படலம். 'செருமுகத்துக் காத்தி என நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி'- (உ. வே. சா. பதிப்பு-325) (கரிய செம்மல்-இராமர்) 3. நீலம்: சிலம்பு-16-46 & 47 "ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ' (பூவைப்பூ நீலநிறமானது) ஆயர்பாடிக் கிருஷ்ணன் கறுப்பன். கிருஷ்ணன் என்னும் சொல்லுக்குக் கறுப்பு என்பது பொருள். ஆனால் இளங்கோ வடிகள் பூவைப் புதுமலர் வண்ணன்' எனக் கூறியுள்ளார், பூவைப் பூ நீல நிறமானது. இன்னும் கேட்டால் செம்மை யும் வெண்மையும் சிறிது சிறிது கலந்த நீல நிறம் உடையது என்றும் கூறலாம். நீல வண்ணன் என்னும் பெயர் வழக்கு உலகியலிலும் உண்டு. 4. நீலக் கறுப்பு மயக்கம்: சிலம்பு-11-35 & 36 'நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரித் தகலாது படிந்தது போல’’ இங்கே, நீல மேகம் என்பதற்குக் கரிய மேகம் எனப் பொருள் கூறப்படுகிறது. உலக வழக்கிலும்தெருக் கூத்திலும் திருமாலை நீல மேக சியாமள வர்ணன்' என்று கூறுவ துண்டு. சியாமளம்-கருமை.