பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மா தவம் புரிவாள் சிவன் பெயர்களாகிய இந்த இரண்டையும் பெற்றது. இவையும் பண்பால் பெறப்பட்டவையாகும். 45. வேதாக்கினி குமரன் சா.சி.பி. அகர முதலியில் உள்ள இப்பெயரும் வெப்பத் தொடர்பால் தரப்பட்டதே. அக்கினியின் பிள்ளை போல் குப்பை மேனி வெப்பம் தருகிறதாம். (குப்பை மேனிக்கு இவ்வளவு பெரிய பெயர்களைக் கொடுத்திருக்க வேண்டுமா என்ன!) 4.6 திரிபுரம் எரித்தோன் திரிபுரத்தான் என்னும் பெயர் சங்கத்து அகராதியிலும், திரிபுரம் எரித்தோன் என்பது சா.சி.பி. அகர முதலியிலும் கூறப்பட்டுள்ளன. இப்பெயர்களும் நெருப்பு தொடர் பானவை - சிவனுடையவை, நெருப்பின் (வெப்பத்தின்) தொடர்பால் குப்பைமேனிக்கும் இடப்பட்டன. 4.6.1. வரலாறு சைவ சித்தாந்திகள் இதுபற்றிக் கூறும் புராண வரலாறாவது: தாராசுரனின் பிள்ளைகளாகிய வித்துற்மாலி (வித்வன் மாலி). தாராக்கன், கமலாக்கன் என்னும் அரக்கர் மூவரும். முறையே பொன்கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக் கோட்டை ஆகியவற்றை இருப்பிடமாகக் கொண்டவர்கள்; சிவனுக்கு அன்பர்கள். இவர்கள் தம் கோட்டையோடு தேவர்கள் இருக்கும் பகுதியில் சென்று இறங்கி நசுக்கி அழித்துத் தேவர்கட்குத் தொல்லை தந்து வந்தனர். தேவர்கள் திருமாலின் துணையால், இந்த அரக்கர்களைச் சிவனுக்குப் பகையாக்கி விட்டனர். சிவன், இந்த அரக்கர் களை அழிக்கப் பின்வருமாறு செய்து புறப்பட்டார்.