பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் அதாவது, அண்ட அமைப்பினைத் தேராகவும், ஞாயிறையும் திங்களையும் தேர் உருளைகளாகவும், மறைகளைக் குதிரை களாகவும், நான்முகனைத் தேரோட்டியாகவும், மேரு LD Gð) 6V Gð) ll f வில்லாகவும். வாசுகிப்பாம்பை வில்லின் நாணாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு போருக்குப் போனார். போன இடத்தில், தேவர்களின் இரங்கத் தக்க நிலையையும் அரக்கர்களின் செருக்கையும் எண்ணி ஒரு வெடிச் சிரிப்பு சிரித்தார். அந்தச் சிரிப்பிலிருந்து நெருப்பு தோன்றிப்போய், மூன்று அரக்கர்களின் மூன்று கோட்டை நகரங்களையும் எரித்து அழித்தது. திரிபுரம் என்றால் மூன்று கோட்டை நகரங்கள். இதனால் சிவனுக்குத் திரிபுரம் எரித்தோன் என்னும் பெயரும் சுருங்கத் திரிபுரத்தான் என்னும் பெயரும் ஏற்பட்டன. இவை வெப்பம் உண்டாக்கும் குப்பை மேனிக்கும் பண்பால் பெயராயின. 4.7 தோலுரித்தோன் இந்தப் பெயரும் நெருப்பு தொடர்பானது; சிவனுக்கு உரியது. இதன் வரலாற்றைக் காணலாம்: 4.7.1 வரலாறு இஃதும் சைவ சித்தாந்திகள் கூறும் வரலாறாகும், தாருகாவன முனிவர்கள், செயலே பயன்தரும் - தெய்வம் வேண்டா எனவும், அவர்தம் மனைவியர்கள். கற்பேபோதும் தெய்வம் வேண்டா எனவும் தருக்கு கொண்டிருந்தனர். இவர்தம் தருக்கை அடக்க எண்ணிய சிவன் திருமாலுடன் புறப்பட்டார். % முனிவர்கள் நீராடச் சென்றிருந்த இடத்தில் திருமால் மோகினி உருக்கொண்டு சென்று அவர்களை மயக்கித்