பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரையே இந்த மூன்றாம் பாகத்திற்குச் குட்டியுள்ளேன். இந்த நூலில் ஒரு முந்நூறு பெயர்கட்குப் பெயர்க் காரண விளக்கம் தரப்பெற்றுள்ளது. நெடுநேரம் எண்ணிப் பார்த்துப் பெயர்க் காரணங்கள் கண்டுபிடித்துத் தரப்பெற் றுள்ளன. அவற்றுள் சில பொருந்தாதவை என எவர்க்கேனும் தோன்றின் அவற்றைத் தள்ளிவிடலாம். மரஇனப் பொருள்கட்கு, சார்பு, பண்பு, பயன், உடற்கூறு, வடிவம், வண்ணம், செயல், மொழிபெயர்ப்பு, சொல் விளையாட்டு, ஒப்புமை முதலிய பல்வேறு தொடர்புகளால் புனைபெயர்கள் வைக்கப்பெற் றுள்ளன. இந்த நூலில் உரிய இடங்களில் அந்தத் தொடர்புகள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏறத்தாழ இருநூறு மேற்கோள் சான்றுகள், பல இலக்கிய நிகண்டு - அகராதி நூல்களிலிருந்து இந்நூலில் தரப் பெற்றுள்ளன. இந்நூலின் இறுதியில், மூன்று பாகங்கட்கும் சேர்த்து "ஒரு கண்ணோட்டம்' என்னும் தலைப்பில் ஒருவகை ஆய்வு முடிபு தரப் பெற்றுள்ளது. மூன்று பாகங்களையும் படித்தாலேயே இந்த ஆய்வு முடிபு தெளிவுறும். இருப்பினும், இந்த மூன்றாம் பாகத்தைக் கொண்டும், ஆய்வு முடிபைப் போதுமான அளவு தெளிந்து கொள்ளலாம். அன்பர்களின் நல்லாதரவைத் தலைவணங்கி என்றும் வேண்டுகிறேன். இந்த நூல் வெளியீட்டிற்கு ஓரளவு பொருளுதவி புரிந்த புதுச்சேரி அரசுக்கு நன்றி செலுத்துகிறேன். மூன்று பாகங்களையுமே நன்முறையில் அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் பிரிண்டர்சுக்கு நன்றி. பணிவுடன் 25–5–1991 சுந்தரசண்முகன்