பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மா தவம் புரிவாள் தம்மைப் பின் தொடர்ச் செய்தார். சிவன் உடையின்றி, அழகிய தோற்றத்துடன், முனிவர்களின் மனைவியர்கள் இருக்கும் இடத்திற்கு இரவலனாகச் சென்று அவர்களை மயக்கிப் பின்தொடரச் செய்தார். சிவனால் தாங்களும் தம் மனைவியர்களும் நிலை தடுமாறியதை யறிந்த முனிவர்கள், சிவனை அழிக்க எண்ணி, தீ மூட்டி ஆபிசாரம்' என்னும் ஒரு வேள்வி நடத்தினர். அவ்வேள்வியில் பல பொருள்களைத் தோன்றச் செய்து, அவற்றைச் சிவன்மேல் ஏவி அழிக்கும்படித் தூண்டினர். அனுப்பிய பொருள்களுள் புலியும் யானையும் உண்டு. சிவன் எல்லாப் பொருள்களையும் தம்வயப்படுத்திக் கொண்டார். புலியின் தோலை உரித்து ஆடையாகக் கட்டிக் கொண்டார். யானையின் தோலை உரித்து மேலே போர்த்திக் கொண்டார். யானையின் தோல், மக்கள் தோல் போலவே உரிக்க முடியாதது; அதையும் உரித்து விட்டார். இறுதியில் வேள்வித் தீயையே ஏவியனுப்பினர்; அதைக் கையில் ஏந்திக் கொண்டார். பின்னர், முனிவர் செருக்கு அடங்கிச் சிவனை வழிபடலாயினர். வேள்வி நெருப்பிலிருந்து வந்த புலி, யானை ஆகிய வற்றின் தோலை உரித்ததால், தோலுரித்தோன் என்னும் பெயர் சிவனுக்கு ஏற்பட்டது. வெப்பத் தொடர்பால், இது குப்பை மேனிக்கும் கூறப்பட்டது. 4.8 கரியுரியுரித்தோன் கரியுரி (கரி+உரி) என்றால் யானைத்தோல். யானைத் தோலை உரித்தவன் கரி உரித்தோனாவான். சிவனுக்கு உரிய இப்பெயரும் வெப்பத் தொடர்பால் குப்பை மேனிக்கும் கூறப்பட்டது. தோலுரித்தோன், கரியுரி உரித்தோன் என்பன பண்பால் பெற்ற பெயர்கள்.