பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 79 5. பயனொடு பிறகாரணங்கள் பயனால் பெற்ற பெயர்கள்: 5-1 & 2. ஊருடம்-ஊருடன் முதலியார்: ஊருடம் என்னும் பெயர் சா.சி.பி. அகர முதலியிலும், ஊருடன் முதலியார் என்பது சித்த வைத்திய அகராதியிலும் குப்பை மேனிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பெயர்கள் முருங்கை மரத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஊரார்க்குப் பொது உடைமையாகவும், பஞ்சம் போக்கும் உணவுப் பொருளாகவும், மூலதனம் போன்ற முதன்மைப் பொருளாகவும், ஊரின் பல இடங்களிலும் உள்ள பொருளாகவும் இருப்பதால், முருங்கைக்கு இப்பெயர்கள் இடப்பட்டிருக்கலாம். குப்பை மேனி, முருங்கையளவு பயன் தராவிடினும், ஊரில் யார்க்கும் எளிதில் கிடைத்துப் பயன்தரும் பொருளாகவும், ஊரில் பல இடங்களில் அதாவது - கண்ட கண்ட இடங்களில் உள்ள பொருளாகவும் இருப்பதால், இதற்கும் இப்பெயர்கள் ஒரளவேனும் பொருந்தலாம். 5-1 & 2-1. மருத்துவப் பயன்: குப்பைக் கீரை, குப்பை வேளை ஆகிய இரண்டும் நிரம்பவும் உணவாகப் பயன்படுபவை. குப்பை மேனியோ, உணவுக்கு ஒரளவே பயன்படினும், இதன் மருத்துவப் பயன் மிகுதியாகும். இதன் மருத்துவப் பயன், தேரையர் குண பாட நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. தந்த மூலப்பிணி, தீத்தந்திடு புண், சர்வவிடம், உந்து குன்மம், வாதம், உதிரமு - லந்தினவு,