பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மர் தவம் புரிவtள் குலம், சுவாசம், தொடர் பீநசம், கபம்போம் ஞாலங்கொள் மேனி யதனால்' ... • (மேனி = குப்பை மேனி) கருத்து:- குப்பை மேனி இலையால், பல்நோயின் மூலகாரணம், நெருப்பு சுட்டபுண், உணவு - வகையால் பயறு முதலியவற்றால் உண்டாகும் நச்சுத்தன்மை, வயிற்று வலி, வளிநோய் (வாயுவு), குருதிமூலம் (Piles) நமைச்சல், குத்தல், மூச்சு இரைப்பு, முக்குநீர் ஒழுகல், கோழை ஆகிய பிணி நீங்கும் - என்பது கருத்து. 5-1 & 2-2. உணவுப் பயன்: காந்திமெய் இலைக்கறி கனிவுடன் அயிலமெய் யாந்திமிர் வாதநோ யாதிகள் போய்விடும்' என்னும் தேரையர் பாடலில், குப்பைமேனி இலையின் உணவுப் பயன் கூறப்பட்டுள்ளது. காந்திமெய் என்பது, ஒளி வீசம் உடம்பு எனப் பொருள்படும். இது இங்கே, பளபளக்கும் மேனிச் செடியைக் குறிக்கின்றது. இதன் இலையைக் கறி (பதார்த்தம்) செய்து விருப்பமுடன் உண்டால், உடம்பிலுள்ள திமிர்வாத நோய் முதலியன போய்விடும் - என்பது கருத்து. அடுத்து, முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் தரப்பட்டுள்ள தேரையர் பாடல் பகுதி ஒன்றும் அதன் பொருளும் வருமாறு: 'இலைமேனி யயிறி விளக்கெண் ணெயின்மெய் யட்டியிலை மேனியை யா' பொருள்: குப்பை மேனியின் கீரையை ஆமணக்கு எண்ணெயில் தாளிதம் பண்ணி, ஒரு மண்டலம் கற்ப முறையாய் உண்க. அது, வாய்வுடனே சேர்ந்த பொல்லாத