பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மா தவம் புரிவாள் முருங்கை போல், குப்பை மேனி, ஊரில் எளிதாய்க் கிடைத்து எல்லோருக்கும் பயன்படுவதால், இதற்கும் 'ஊருடம்', 'ஊருடன் முதலியார் என்ற பெயர்கள் பயன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம். ஊரில் எங்கும் - பல இடங்களிலும் காணப்படுவதால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக் கலாம் எனின், இடம் காரணமாகப் பெற்ற பெயர்களாகக் கொள்ளல் வேண்டும். 5.4. உப்பு மூலிகை: இப்பெயர் சா.சி.பி. அகர முதலியில் தரப்பட்டுள்ளது. உப்புக் கூறு இருப்பதால் வாழை மரத்துக்கும் உப்பு மூலிகை" என்னும் பெயர் உண்டு. அதே போல், குப்பை மேனியிலும் உப்புக் கூறு அடங்கியிருக்கிறது. அதனால் இதற்கும் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பயனால் வந்த பெயர். இதில் உப்புக் கூறு அடங்கியிருப்பதால் உடற் கூறால் பெற்ற பெயர் எனவுங் கூறலாம். 5.5. கடிப்பாங்கிச் செடி, இப்பெயர் சித்த வைத்திய அகராதியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடி என்பது, பூச்சி, எலி முதலியவை கடித்ததால் உண்டாகும் நோயைக் குறிக்கும். பாங்கி என்ற சொல்லுக்கு, nurse” என்னும் ஆங்கிலச் சொல்லுக்குக் கொள்வது போல், தாதி, செவிலி, பிணி போக்கிப் பேணிக்காப்பவர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம், கடிப் பாங்கி என்பதற்கு, கடி நோயை வளர்க்கும் பாங்கி என்று பொருள் கொள்ளலாகாது. பசிப் பிணி மருந்து என்றால் பசிப் பிணியைப் போக்கும் மருந்து எனவும், பசிப் பிணி மருத்துவன் என்றால், பசி நோயைப் போக்கும் மருத்துவனாகிய வள்ளல் எனவும் பொருள் கொள்ளல் போல, கடிப் பாங்கி என்பதற்கு, கடி