பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர, சண்முகனார் 83 நோயைப் போக்கிக் காக்கும் தாதி - செவிலி எனப் பொருள் கொள்ளல் வேண்டும். குப்பை மேனி நச்சுக் கடியைப் போக்கும் என்பது பற்றி முருகேச முதலியாரின் பொருட் பண்பு நூலில் கூறப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு. - 'குப்பை மேனி இலையை அரைத்துப் புண், நஞ்சுக் கடி இவைகளுக்குப் போடலாம். அல்லது, இலையை மஞ்சளுடன் கூட்டி அரைத்துப் பூசலாம்'. 'குப்பை மேனி வேரை அரைத்து, சுமார் ஒரு கொட்டைப் பாக்கு அளவு நீரிற் கலந்து மூன்று நாள் கொடுத்து உப்பில்லாப் பத்தியம் வைக்க, எலி விடம் தீரும். ஆனால், வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும்' நச்சுக் கடி, எலிக்கடி போன்றவை குணமாகும் என்பது இதனால் விளங்கும் பாங்கு என்பதற்கு உடல் நலம் (Health) என்ற பொருளும் உண்டு. திருமேனி பாங்கா?' (உடல் நலமா?) என்று வினவும் ஒரு வகை மரபு உண்டு. எனவே, கடி நோயை நலப்படுத்துவது - குணப்படுத்துவது கடிப்பாங்கி என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, கடிப் பாங்கிச்செடி என்னும் பெயர் குப்பை மேனிக்குப் பொருந்தும். இது பயனால் பெற்ற பெயர். 6. சார்பினால் பெற்றபெயர்கள்: 6.1 & 2. பூனை வணங்கி - பூனைப்பகை: பூனை வணங்கிச் செடி, பூனைப் பகைச் செடி என்னும் பெயர்கள் சி. வை. அகராதியிலும், பூனை வணங்கி என்பது மு. வை. அகராதியிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்களால், பூனைக்குக் குப்பை மேனிச் செடி பகை போலவும், அதனால் பூனை அந்தச் செடியை வணங்குவது போலவும் குறிப்பு தெரிகிறது. -