பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 மா தவம் புரிவாள் பெயர்க் காரணம் உய்த்துணர்ந்து கூறப்பட வேண்டும். சில காரணங்கள் வருமாறு: 1. குப்பை மேனி சில பிணிகளைப் போக்கி இன்பம் உண்டாக்கும். சிறிது அளவு மீறினும் வாந்தி, கழிச்சல் ஆகியவற்றால் துன்பம் செய்யும். இதனால், இதற்கு, வாந்தியுண்டாக்கி (Emetic), பெருமலம் போக்கி (Cathartic) என்ற பெயர்களும் உண்டு. - 2. குப்பைமேனி, செல்வமுடைய இன்பக் காலத்தில் மருந்தாகப் பயன்படுகிறது; ஏழமையுள்ள துன்பக் காலத்தில் உணவாகப் பயன்படுகிறது. (பொதுவாகக் குப்பைக் கீரையையும் இதில் அடக்கவேண்டும்). 3. மங்கல நிகழ்ச்சிகளில் உண்டாகும் கழிவுப் பொருள்களும் குப்பையில் போடப்படுகின்றன. துக்க (சாவு) நிகழ்ச்சிக் கழிவுகளும் போடப்படுகின்றன. இந்தக் குப்பையில் உள்ள மேனிச்செடி இரண்டையும் அறிகிறது. 4. குப்பை என்பது பொதுவாகத் தாழ்வையும், மேனி என்பது பொதுவாக உயர்வையும் குறிக்கும். இவ்வாறு உயர்வு தாழ்வுகளை நினைவு செய்யும் இருவகைச் சொற் களையும் கொண்டது. மேற்கூறியவற்றுள், முதலிரண்டு காரணங்களின் அடிப்படையில் பயனால் பெற்ற பெயராகவும், பின்னிரு காரணங்களின் அடிப்படையில் சார்பில் பெற்ற பெயராகவும் கொள்ளலாம். 7. மிகுதியால் பெற்ற பெயர்கள்: 7-1, 2, 3. பயிலியம் - பயிலியமேனி - பயிலிகம்: மூலிகை வைத்திய அகராதியிலும் வைத்திய மலை அகராதியிலும் பயிலியம்' என்னும் பெயரும், சித்த