பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 87 வைத்திய அகராதியில் பயிலிய மேனிச் செடி” என்னும் பெயரும், சா.சி.பி. அகராதியில் பயிலிகம்' என்னும் பெயரும் குப்பை மேனிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. பயில் என்ற வேர்ச் சொல்லின் அடிப்படையில் இப்பெயர்கள் எழுந்திருக்க வேண்டும். பயிலுதல் என்பது, செயல் மிகுதி, கால மிகுதி, பொருள் மிகுதி, இட மிகுதி, முதலிய மிகுதிகளைக் குறிக்கும். எனவே, ஊரில் பல விடங்களில் - கண்ட கண்ட இடங்களில் குப்பை மேனி பரவலாக என்றும் மிகுந்து காணப்படுவதால், இம்மிகுதி பற்றி இப்பெயர்கள் சூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம், அரைகுறை மனத்தோடு எண்ணிக்கொண் டிருக்கையில், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் (Lexicon) உள்ள பயிலியம்' என்னும் சொல்லின் விளக்கம், இப்பெயர்க் காரணம் சரியே என நம்பிக்கை ஊட்டுவதாயிற்று. அதிலுள்ள சொற்பொருள் விளக்கம் அப்படியே வருமாறு:- "பயிலியம் Payiliyam, N. A wide - Spread Common weed. See (51160 GLDGs. (மலை) wide - Spread என்பது, மிகப் பரந்துபட்ட அளவில் பல இடங்களிலும் பரவியிருப்பது என்னும் கருத்தில் உள்ளது. Common என்பது, எல்லார்க்கும் பொதுவான இடங்களில்-எல்லாருக்கும் பொதுவான முறையில் என்பது போன்ற கருத்துடையது. Weed என்பது, மிகுதியாக உள்ள செடி என்னும் கருத்தினது. பெரும்பாலும் பெயர்க்காரணம் கூறாத இப்பேரகராதி, இந்தப் பெயர்க்காரணம் கூறி யிருப்பது பெருந்துணை. எனவே, இந்தச் சொல் விளக்கத் தைக் கொண்டு, குப்பை மேனி, பல இடங்களிலும் மிகுதி யாகப் பரந்துபட்டு முளைத்துக் கிடக்கும் செடிவகை என்னும் கருத்து புலனாகும்.