பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மா தவம் புரிவாள் 7-அ. இலக்கியச் சான்று பயிலுதல் என்னும் சொல்லின் பொருள் விளக்கத்திற்கு இலக்கியச் சான்றுகள் பார்க்கலாமே: - 1) திருக்குறள் 'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு' (783) கற்றக் கற்க நூல் நயமாயிருப்பது போல், பழகப் பழக நல்லோர் நட்பு இனிக்கும் என்பது குறள் கருத்து. இது செயல் மிகுதியாகும். 2) புறநானூறு அதியமான் அஞ்சியை ஒளவையார் பாடியுள்ள ஒரு புறப்பாட்டில் உள்ள ஒரு பகுதி குறிப்பிடத்தக்கது. 'ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ' (101) பழைய உரை, யாம் ஒருநாட் செல்லேம்; இரண்டு நாட் செல்லேம்; பலநாளும் பயின்று பலரோடு கூடச் செல்லினும் முதற் சென்ற நாள் போன்ற விருப்பத்தை யுடையன்' என்பதாகும். இது கால மிகுதியாகும். 3) கலித்தொகை 103-60 'பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும்' நச்சர் உரை: நெருங்கிய இதழ்களையுடைய மலர் போலும் உண் கண்ணினை யுடைய காதலை யுடைய) மகளிரும்' - இதழ்கள் நெருங்கி நிரம்ப இருப்பது பொருள் மிகுதியாகும்.