பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மா தவம் புரிவாள் மனம் பேதுறுமாம். என்ன செய்வது - எங்கே செல்வது. எவ்வாறு செல்வது - என்று ஒன்றும் புரியவொட்டாமல் திகைக்க வைக்குமாம். மயங்கச் செய்யுமாம். முறை மயங்கிச் செடி என்னும் பெயர் பெற்றுள்ள குப்பை மேனிச் செடி இப்படியொன்றும் மயக்குவதில்லை. அங்ஙனமாயின் இதில் என்ன மயக்கம் உள்ளது? மேனி என்பது, உயர்ந்த அழகிய வடிவம் உடைய பொருளைக் குறிப்பது. குப்பை என்பது, இழிந்த இடத்தைக் குறிப்பது. இயற்கையாக, . உயர்ந்த பொருள் உயர்ந்த இடத்தில் வைத்துக் காக்கப்பட வேண்டியதே முறை யாகும். மாறாக, உயர்ந்த பொருள் இழிந்த இடத்தில் இருக்குமாயின், இந்த நிலைமைக்கு முறை மயக்கம்' என்ற பெயரே கூறப்பட வேண்டியதாகும். இங்கே, நீதி வெண்பா என்னும் நூலின் முதல் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது: "தாமரைபொன் முத்து சவரம் கோரோசனை பால் பூமருதேன் பட்டு புனுகு சவ்வாது - அம்அழல்மற்று எங்கே பிறந்தாலும் எள்ளாரே, நல்லோர்கள் எங்கே பிறந்தாலும் என்’’. என்பது பாடல். தாமரை, பொன், முத்து, சாமரை, கோரோசனை, பால் (பசுவின்பால்), தேன், பட்டு, புனுகு, சவ்வாது, நெருப்பு, ஆகியவை உயர்ந்த பொருள்களாம். இவை எங்கே பிறந்தாலும் - அதாவது - தோன்றிய இடம் இழிந்ததாக இருப்பினும் இகழப்படா. இவ்வாறே, நல்லவர்கள் எங்கே - எந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் (ஏசு நாதரைப்போல் மாட்டுக் கொட்டிலில் பிறப்பினும்) உயர்வாக மதிக்கப் பெறுவர் - என்பது கருத்து. மேனிச் செடிக்கும் இந்த நிலை பொருந்தும். உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டிய உயர் பொருள் போல்