பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 89 4) சுந்தரர் தேவாரம்-திருப்பனையூர்: 'பாவிரி புலவர் பயிலுந் திருப்பனையூர்' - (6) "பஞ்சிமெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்' - (10) பாவிரி புலவர்களும் பஞ்சிமெல் லடியார்களும் திருப்பனையூரின் பல பகுதிகளிலும் பயின்றிருப்ப ராதலின் இவை இட மிகுதியாகும். 7-ஆ. நான்கு மிகுதிகள் பயிலியம் (பயிலிகம்) என்பதில், மேற்கூறியுள்ள நான்கு மிகுதிகளும் உள்ளன. குப்பை மேனிச் செடி, ஊரின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாக் காலத்தும் மிகுந்த அளவில் பயின் றிருத்தலின், இதற்கு இப்பெயர்கள் மிகவும் பொருந்தும். மழைக் காலத்தில் இதன் மிகுதிப் பயிற்சியைப் பற்றிச் சொல்லவேண்டிய தில்லை. இப்பெயர்கள் மிகுதியால் பெறப்பட்டவை. 8. செயலால் பெற்ற பெயர்: 8.1 . முறை மயக்கிச் செடி இப்பெயர் சி.வை. அகராதியில் தரப்பட்டுள்ளது. குறிஞ்சித் திணையில் (குறிஞ்சி நிலத்தில்) வளரக்கூடிய மரம், முல்லைத் திணையில் (முல்லை நிலத்தில்) இருப்ப தாகக் கூறுவது திணை மயக்கம் எனப்படும். ஒரு வேற்றுமை உருபு இருக்கவேண்டிய இடத்தில் மற்றொரு வேற்றுமை உருபு மயங்கி (மாறி)யிருந்து பொருள் தருவது உருபு மயக்கம் எனப்படும். இவைபோல, குப்பை மேனியில் என்ன மயக்கம் உள்ளது எனக் காணின், வெளிப்படையாக ஒன்றும் தெரிந்திலது. - திகைப்பூண்டு, மதி மயக்கி, மன மயக்கி என்னும் பெயர்களை உடைய ஒரு செடி உள்ளது. அதை மிதித்தவர்