பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 91 தோற்றமளிக்கும் மேனிச்-செடி, தாழ்ந்த இடமாகக் கருதப்படும் குப்பையில் இருப்பது முறையாகாது - முறை மயக்கமே யாகும். செந்தாமரைத் திருமகள் என்னாமல், சாக்கடைத் திருமகள் என்று கூறுவது போல் இருக்கின்ற தல்லவா இது? இந்த மயக்கத்தைச் செய்வதால், குப்பை மேனி, முறை மயக்கிச் செடி என்னும் பெயர் பெற்றதாகக் கூறலாமன்றோ? சேற்றில் முளைக்கும் செந்தாமரை முதலிய பொருள்கள் போலவே குப்பையில் தோன்றும் மேனியும் பயனால் மதிக்கப் பெறும். 8-2. இப்பெயரைச் செயலால் பெற்ற பெயர் என்று சொல்வதல்லாமல், பண்பாலோ - இடத்தாலோ - சார்பர்லோ பெற்ற பெயராகவும் கூறலாமே! 9. ஒன்றினமும் தன்னினமும் 'ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்' என்னும் நன்னூல் கொள்கைப்படி, பிறப்பிடத்தால் மேனியின் இனத்தைச் சேர்ந்த குப்பை வேளை, குப்பைக் கீரை ஆகியவவை பற்றியும் ஈண்டு காண்பாம். இம் மூன்றுமே, வெப்பம் உண்டாக்குதல், வாதம் - கபம் முதலிய பிணிகளைப் போக்குதல் ஆகியவற்றாலும் ஓரினமாகும். இவை பற்றிய பாடல்களும் கருத்துகளும் இந்தக் கட்டுரை யில் முன்னமேயே கூறப்பட்டுள்ளன. 9.1. கித்திய கல்யாணி வாடா மல்லிகைச் செடி, துலுக்க மல்லிகைச் செடி ஆகியவற்றை, அவற்றின் பண்பினால், நித்திய கல்யாணி என்று கூறுவதுண்டு. ஆனால், சா.சி.பி. அகர முதலியோ, குப்பை வேளை என்னும் செடிக்கும் நித்திய கல்யாணி என்னும் பெயர் தந்துள்ளது.