பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 மா தவம் புரிவாள் குப்பை வேளை, சங்க இலக்கியமாகிய சிறுபாணாற்றுப் படையில் இடம் பெற்றுள்ளது: 'ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும் அழிபசி வருத்தம் வீட'... (135-140) என்பது பாடல் பகுதி. மிக்க வறுமை நிலையை இப்பகுதி ஒவியப் படுத்திக் காட்டுகிறது. கிணைப் பறை கொட்டு வோனுடைய ஏழை மனைவி, பசியினால் தளர்ந்து வருந்துகிறாள். நுண்ணிய இடுப்பு தளர்ச்சியால் ஒடிந்து விடும்போல் தோன்றுகிறது. குப்பையில் உள்ள வேளைக் கீரையைத் தன் கையின் கூரிய நகத்தால் கிள்ளிப் பறித்து வந்தாள், உப்பும் இல்லாமையால், வறிதே வேகவைத்து அடுப்பினின்றும் இறக்கினாள்; (வேகவைக்கத் தண்ணிராவது கிடைத்துள்ளது போலும்). உப்பில்லாத குப்பை வேளைக் கீரையை உண்பதை அறிவில்லாத - செருக்குடைய மாந்தர் சிலர் காணின் இகழ்வர் என நாணுகின்றாள்; அதனால், யாரும் காணாதவாறு கதவைக் சாத்திவிட்டாள்; அக்கீரை உணவை, தன் பெரிய குடும்பச் சுற்றத்துடன் சேர்ந்து உண்கிறாள். அப்படியும் மிக்க பசி போகாமல் வருத்துகிறது என்பது பாடல் செய்தி. - மனையில் எது இருப்பினும் இல்லாவிடினும், மனைத் தோட்டத்தில், பசியைப் போக்க இந்தக் குப்பை வேளைக் கீரை என்றும் இருக்கும் ஆதலின் இதற்கு நித்திய கல்யாணி' என்னும் பெயர் இட்டனர் போலும்!