பக்கம்:மாதவம் புரிவாள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 93 9.2 அமெரிக்கக் குப்பை வேளை பேச்சு வழக்கில் பீநாறிப் பூ', 'காக்காப் பூச்செடி", பீங்கான் பூச்செடி', 'சுடுகாட்டுச் செடி என்றும், தமிழ் மருத்துவர்களால் சுடலைப் பூ என்றும், மர நூலாரால் "வின்கா ரோசியா (Vinca Rosea) என்றும் பெயர் சொல்லப் படுகின்ற ஒருவகைக் குப்பை வேளை இந்தியநாடு முழுவ திலும் இருக்கிறது. இதன் தாயகம் அமெரிக்க நாடு' என்றும் சொல்லப்படுகிறது. இற்றைக்குமுன் ஐந்நூறு ஆண்டுகால அளவுக்குள்தான் - அதாவது 1492-ஆம் ஆண்டு தான், கொலம்பசு அமெரிக்கக் கண்டத்தை முதல் முதல் கண்டுபிடித்தார். எனவே, இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகச் சொல்லக்கூடிய சிறுபாணாற்றுப் படையில் சொல்லப்பட்டுள்ள குப்பை வேளை என்னும் செடி, அமெரிக்காவிலிருந்து வந்ததினும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். மற்றும், நாடோறும் (நித்தியம்) ஒரே நிலையில் இருப்ப தற்கும் "நித்திய கல்யாணி என்று சொல்வது வழக்கம். இந்தக் குப்பை வேளை நித்தியம் தவறாமல் உதவக்கூடிய (ரெடிமேடு) சரக்கு ஆதலின், நித்திய கல்யாணி என்னும் பெயர் பெற்றது என்றும் சொல்லலாமோ! 9.3 பேய்ப் பலாதி பேய்ப் பலாதி = குப்பைக் கீரை' எனச் சா.சி.பி. அகர முதலியிலும், பேய்ப் பலாதிக் கீரை ைகுப்பைக்கீரைச் செடி” எனச் சி.வை. அகராதியிலும் சொற்பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. குப்பையில் பேய்போல் நிரம்ப மண்டிக் கிடக்கும் கீரையாதலின், குப்பைக் கீரைக்குப் பேய்ப் பலாதி' எனப் பெயர் இட்டனர் போலும். தாறுமாறாய் ஏராளமாக