குறள் பிறந்த நாள் முதல் - இன்று வரை, அதன் உள்ளே சென்றவன், தன் கருத்து, தன் தெய்வம், தன் மதம் இருக்கின்றதா என்று பார்க்கிறானே தவிர, அதன் உண்மையை உணர்ந்து பார்த்தது இல்லை. - - எந்த உரையாசிரியருடைய நூலை எடுத்துப் பார்த்தாலும், அதில் அவரவர் வ?ரு ப பு , வெறும் பு , தன்னலம், தன் மதம் தாண்டவமாடுகின்றதே அன்றி - எந்நாட்டவருக்கும், எம் மதத்தினருக்கும், எக்காலத்தவருக்கும் பொருந்துமாறு எழுதப்பட்டதாகப் புலப்படவில்லை. கடவுளாலேயே நேரிடையாகச் சொல்லப்பட்டு, இரண்டாவது ஆட்களாலே "Second hand person” னால் எழுதப் பெற்ற பகவத்கீதை, பைபிள், திருக்குரான் போன்றவை கூட, நேரிடையான பொருளை ஒர் இனத்திற்கோ, ஒரு மதத்திற்கோ கொடுத்து விடுகின்றது. ஆனால், திருக்குறள் தமிழ்தான் அதிலுள்ள எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள் தான். உலகத்திலுள்ள தத்துவங்கள் அத்தனையும் - மதத் தத்துவங்கள் அனைத்தும் - தங்களுடைய அடிப்படைகளுக்கு எதாவது கிடைக் காதா என்று, குறளை மட்டும் துாண்டில் போட் டுக் கொண்டிருக்கின்றன என்றால் - திருக்குறளின் பெருமை என்னே! தமிழ்நாட்டில், ஒவவொரு காலக் கட்டத்தில் தோன்றிய உரையாசிரியர்கள் அத்தனைபேரும், அவரவர் மதக் கண்ணோட்டத்தோடு குறளைப் பார்த்த பிறகும், இதற்குள்ளே இன்னும் வேறு ஏதோ பொருள் பொதிந்திருக்க வேண்டுமென்று, மேல் நாட்டுத் தத்துவவாதிகளும் - பேராசிரியர்களும், அறிவு வெறி கொண்டு இங்கே பறந்து வருகிறார்கள் என்றால், குறளை ஒருவன் எழுதினான் என்பதற்குப் பதில், குறள் இயற்கையாகவே தோன்றிய ஒன்று என்று கடிடச் சொல்லிவிடலாம். காலத்தைக் கடந்த ஒரு மத நூல் இதுவரையில் இல்லை, ஏனென்றால், அந்த மதத் தலைவரின் பிறப்பும் - இறப்பும் காலண்டரில் தெரிகிறது. குறளாசிரியர் எப்போது பிறந்தாள் - எப்போது இறந்தனர் என்று கூட இதுவரைத் தெரியவில்லை. அதன் உரையாசிரியர்களும் - ஆய்வாளர்களும் அவரவர் முடிவு க்குக் கிட் டிய மதிப் பட்டை வைத்துக் கொண்டுதான் கணக்கிட்டிருக்கிறார்கள். * - இப்படி, உட்பொருளைக் கொண்டு, புதைபொருள் ஆராய்ச்சிக்கு இலக்கான நூல் - உலகத்திலேயே ஒன்றுகட இல்லை - திருக்குறள் gon Pal - இந்தக் குறளுக்கு இது தான் பொருள் என்று வாய் மூடுமுன், ஏன் - இதுவாக இருக்கக்கூடாது என்ற கேள்வியே எழுகின்றது. வரியப் பிற்குரிய பிறப்பை எடுக்காமல். சாதாரண அரச குடும்பத்திலே பிறந்த புத்தன் கூறிய தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெளத்தர்கள் கூட, அதற்கு முன்னாலே இருந்த சமணர்கள் கட, திருக்குறளைப் பார்த்து, இதில் எங்கள் கருத்தும் இருக்கிறது என்று வாதிடுவதைப் பார்க்கும்போது, -
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/12
Appearance