திருக்குறள், சமண, பெளத்த மதக் காலங்களையும் தாண்டி ஒடுகின்றது என்பதை வரியப் போடு கவனிக்க வேண்டியதாக இருக்கின்றது. - அந்தந்தக் காலத்தில் உரை எழுதிய ஆசிரியர்கள், அவரவர் மதக் காலத்தை வைத்தே திருக்குறளின் காலத்தை நிர்ணயித்தாள்கள். அதனால்தான், குறளுக்கு உரையாசிரியர்கள் இவ்வளவு வேகமாகப் பெருகலானார்கள். திருக்குறளின் காலம் இதுவரை தெரியவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்போது அது எந்த மதத்துக்குச் சொந்தம்? உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ள காலம் தானா - திருவள்ளுவர் காலம்? அந்த அறிவுக்குத் திட்டவட்டமான கால வரம்பு கண்டதுண்டா? திருக்குறளைப் பொறுத்தவரை காலம் கடந்த ஒன்றாக இருக்கும்போது, காலச் சக்கரத்தில் மதங்கள் அடிபடுகின்ற போது, தமிழன் என்ற முறையில் - எனக்கு மகிழ்ச்சி என்றாலும், ஆராய்ச்சி என்ற முறையில் அது வெறுப்பைத் தான் அளிக்கின்றது. எனது திருக்குறளை யாரும் பாராட்டலாம் என்பது வேறு எவனும் என்னுடையது என்று உரிமை கொண்டாடுவது வேறு "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியான் கூறினார். ஆனால், ஒரு மதத்திற்கே தந்து என்று அவர் கறவரில் லை எண் பதைக் கவனத் திலிருத்த வேண்டுகின்றேன். இந்தக் காலத்தில் ஒரு பூஞ்செடியைக் கூட ஒருவன் தனி உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், இயற்கை முன்னே அது பொதுச் சொத்து. எவனுடைய விரல்களிலிருந்து எழுத்தாணி அசைந்தாலும் சரி, அவன் எழுதுகின்ற எழுத்து அவனது அடுக்களைக்குச் சொந்தமல்ல என்பதை - நீங்கள் உணர வேண்டும். அது, கட்டளையில்லாமல் வருகின்ற, காற்றில் கலக்க வேண்டிய பொதுச் சொத்தாகும். நேரிடையாகவே நான் கேட்கிறேன். உங்களுடைய மதங்கள் கடவுளால் நேரிடையாகப் படைத்ததுதானே? அதே கடவுளுடைய பொதுத் தன்மையரில் ஓர் அணுககூட இருக்காதா மனிதனுக்கு ஆகவே, இங்கே ஆய்வுக்காக வந்திருக்கின்ற முப்பத்தெட்டுப் புலமையாளர்களையும் நான் தாள் பணிந்து கேட்கின்றேன். உங்களுடைய மதத்தைக் கடந்து இனத்தைக் கடந்து வெளி வருகின்ற ஆற்றல் படைத்த சிறகுகள், உங்களுக்கு முளைக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன். அப்படி முளைக்காவிட்டால், உங்களுடைய முட்டைகளை நீங்கள் சோதனையிடுங்கள். மனிதன் சரி பான்க்க முடியாத மிருகமல்ல. அத்தகையை நிலையிருந்தால், அவனைக் கடவுள் படைக்கவில்லை! சிந்தனைகள் மிருகத்திற்கு இல்லாதபோது, மனிதனுக்கு மட்டும் இருக்கு ஸ்போது, உரிமைகள் - வேட்கைகள் இவற்றைத் தாண்டிச் 0
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/13
Appearance