பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனென்றால், திருவள்ளுவர் ஒரு திறந்த வெளி ஒன்றுமில்லாத sonausa (“Status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness”) goso/ எழுதியவர். எழுதிய அய்யன் திருவள்ளுவன் - இல்லாத நிலையிலிருந்தால் - உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் - குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா? மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் - இயேசு நாதருக்குச் சீடராக்கி மகிழ் ந் திட அமெரிக்கப் பணமழையரின் ஒருமைப் பாட் டோடு பணிகளாற்றுமா? திருக் குறளுக்கு உரை கண்ட தொல் லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்று வரை கடினவா? பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவ நேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வி. முனிசாமி, கப்பலோட்டிய வ.உசிதம்பரம் பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க. பாவேந்தள் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட்புலமைக்குக் கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே! இருந்தாலும் - இந்த நேரத்தில் இதே கிறித்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல. ஜி.யூ.போப்பைப் போல - வரீரமா முனிவரைப் போல கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால். வேறொரு கோணத்தில் நோக்கும் போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது. திருக்குறள் மத நூல் அல்ல, வாழ்க்கைக்குரிய சட்ட நூல்' வள்ளுவம் கறும் நீதி நூல்! வேண்டுமானால் இவ்வாறு கூறலாம், அய்யன் திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதிக மத கருத்துக்களை ஏற்று, அவற்றை மறுத்து, மதச் சார்பற்ற தமிழர் நெறிகட்குத் தனித்துவம் தந்துள்ளார் என்று, நீங்கள் தான் அதற்குக் கட்ட வேண்டும் நியாய வரம்பு! மதநூல் என்றால், அதிலே மாயம் இருக்கும் அற்புதம் கூத்தாடும் அறிவு நம்பாத ஆச்சரியங்கள் இருக்கும் விஞ்ஞான வளர்ச்சிகள் அதைக் கண்டு வரிலா நோகச் சிரிக்கும்! திருக்குறள் அத்தகைய ஒரு நூலல்லவே! மதமே கூடாது, என்பவனும், மதமே தேவை என்பவனும் திருவள்ளுவன் அல்லன். இவன் இரண்டுக்கும் இடையே, மலைக்கு நடுவே ஒடுகின்ற அருவி. பொதுவாகப் பார்ப் பவன் மனிதனானான் - குறிப் 1ாகப் 13