பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்ப்பவன் மதவாதியானான். செரிக்காத ஆசைகளை வைத்திருந்தவன் சொர்க்கத்தை நாடுவது வாடிக்கை என்றான் - காள்ல் மார்க்க! தேவையான ஆசைகளைப் பூர்த்தி செய்துக் கொள்பவன், திராணியு ள்ள மனிதன் என்றான் - ஏஞ்சல் சு. ஆனால், அய்யன் திருவள்ளுவர் - மனக் கலவரத்திலே ஈடுபட்டுத் தன்னைத் தாக்குப் பிடிக்காதவர்களுக்கே திருக்குறள் செய்தார். மனம், என்ன என்பதை வரிளக்குவதற்குப் பதில், திருவள்ளுவர். அதிலிருந்து தப்பிப்பதற்குரிய வழிகளைச் சொன்னாள். மனத்தின் கண் மாசிலனாதல் என்ற நிலையை உருவாக்க நினைத்தார்: மனம் என்றால் என்ன என்பதைக் கூறிய பிரான் நாட்டுத் தத்துவவாதிகளான ஆல் பரிரைட் கேமு வைவரிட, ஜ"ன் பால் சாத்தேயைவிட, தப்பிக்க முடியா மனத்திலிருந்து, தப்பிக்க வழி கூறிய ஒரே ஒரு உலக தத்துவவாதி திருவள்ளுவரே! வெறும் டைலக்ட்டிகல் அனாலிசு என்று சொல்வார்களே, அதை திருவள்ளுவர் செய்யவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர் பாமர மக்களிடையே வந்து சேர்ந்திருக்கமாட்டான் - படித்தவர்களிடையே சென்று சேர்ந்திருப்பான். மனம் உள்ளவரை மாச்சண்யங்கள் உண்டு. அதன் அடிப்படையில் ஒழுக்கங்களைக் கற்பிப்பது இமாலயப் பிரச்சனை. 'நீங்கள் வெறுமனே இருங்கள் ("Bein nothingness") என்று கூறுவதற்குப் பிரெஞ்சு நாடு காத்திருக்கிறது. ஆனால் எண்ணங்கள் உள்ளவரைதான் மனிதன்', என்ற தத்துவத்தை 1962 - ஆம் ஆண்டுக்கு முன்பேயே சிந்தித்துவிட்டான் திருவள்ளுவன். இவனுக்கு வால் நட்சத்திரம் முளைக்கவில்லை - மாட்டுக் கொட்டகை ஏதும் இல்லை. என்ன இருந்தாலும், நம் நாட்டவர்கள் ஒரு மனிதனை தெய்வமாக்குவது இல்லை, அறிவிலே நுட்ப ஞானத்தைப் பாராட்டினர். அதற்கு வைதிகன் ஆன்மீக சாயம் பூசி வசிட்டான் அவி வளவு தான். இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை - புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார். இந்த விசாரணையில். நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ - மீட்டுக் கொள்வர்களோ - அது எனக்குத் தெரியாது. மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை - அது ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு! அதற்கு மேல் சரித்திரமில்லை . அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை. திருக்குறளின் எழுத்துக்கள் - வைதிக அடிப் படையில், வானத்திலிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது. 14