சாதனைகள் என்று நாங்கள் தைய்யா தக்கா என்று ஆடிப்பாடி மகிழ்கின்றோமோ! பழங்கள் கொத்துக் கொத்தாய்க் குலையாமல் பலனளிக்கின்ற மரங்களின் கிளைகள், மண்ணை நோக்கித் தாழ்ந்தே நிற்கின்றனவே - ஏன்? பணியுமாம் என்றும் பெருமை என்ற தத்துவத்தைஎங்களிடம் வளர்த்தது யார்? உங்களுடைய அரும் பெரும் உழைப்புக்களால் அல்லவா? சொற்களின் மதிப்பைச் சொல்லேருழவன் தான் அறிவான் அதனாலன்றோ எங்களை எல்லாம் மக்களும் - பிறகட்சிகளும் பாராட்டுமளவுக்குச் சொல்லேருழவர்களாக இயக்கினர்கள்? இவை அய்யாவும் - அண்ணாவும் இந் நாட்டிற்காற்றிய சாதனைகளென்றால் மிகையல்லவே! துயில் கொண்ட போதும் கூட, நீவிரிருவம் திராவிடர் இன செம்மை வாழ்வென்ற அழகைத் தானே கனவு கண்டீர்கள் விழித்தெழுந்த போதும் அதே எழிலைத் தானே நனவாக்கும் ஞானக் கடமைகளாகக் கொண்டு மக்கட் சேவைகளை ஆற்றினிர்கள் அவற்றின் எதிரொலிப் பலன்களை அனுபவிக்கும் நன்றி. மறவா நாய்களான நாங்கள் உங்களுக்கு நினைவுச் சின்னங்களை அமைத்துப் போற்றி வருகின்றோம்! ஏன் தெரியுமா? மறதி மனிதனின் உடற்குருதியாக ஊறக்கூடாது என்பதால் தான். பாலிலிருந்து எடுத்த மோர் அல்லவா நமது இன இயக்கம்? அந்த மோரை பிற இனமானம் தாக்கும் போது s í ή ૌિ நாங்களும், மக்களும், எமது தம1 தன்மான வேட்கைக் காக்கப்பட அதை பருகிப் பருகிச் சுயமரி யாதை வீரர்களாக உலா வந்து உவகையுறுகின்றோம். அண்ணா, அந்த GDo கடைந்தெடுத்த வெண்ணெய் 1967-ல் நீங்கள் அமைத்த ஆட்சி! அந்த வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றி, எமது நெஞ்ச உணர்வு உணவுக்குப் பரிமாறி, ஊர் வியக்க, உலகம் மணக்க, வகை வகையான விருந்துக்குள் பெய்து உண்ண வைக்கிறார் கலைஞர் - மக்களை அந்த வெண்ணெய்க் கூட்டணி தண்ணீரில் மிதக்கலாமே தவிர, கரையது, உருமாறாது, அழியாது திராவிட இனம் போற்ற, புகழ ஆட்சி செய்து வருவது தங்களால் அல்லவா அண்ணா! மூத்தோர் சொல்லின் முது நெல்லிக்காய் போன்றது அய்யா உழைப்பு, அண்ணா அமைத்த ஆட்சி. அதனைப் போற்றி வளர்க்கும் 84 வயதேறிய கலைஞரின் வைரச் சிந்தனைகள் பண்புத் திறன்கள் அடிக் கரும்பு சுவையாகவன்றோ சுவைக்கச் சுவைக்க மக்களது புலன்களுக்கு இன்றும் இனிப்பூறுகின்றது. பிஞ்சு மூங்கிலை வளைத்து விடலாம் அது தொடக்கக் கால இயக்கத் தோற்றம் இன்று திராவிடர்ட் பேரியக்கம் முற்றிய மூங்கில் விழுதுகள் பூமியில் பதிந்து விட்ட 'ஆல்' பன்னூற்றாண்டு தலைமுறைகளின் பார்ப்பனிய எதிர்ப்புக்குக் களைப்பாற நிழல் தரும் தன்மானத்தரு சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆன அந்த ஆல் விதையை மாபெரும் மரமாக்கி ஊர் நடுவே வளர்த்து விட்ட அய்யாவே அண்ணாவே, நீங்கள் நிழலாகத் தங்கிய காலம் போக, எஞ்சிய எமது வானாளை அதனடியிலேயே அறிzஇAA% உடையான் படைக்க தங்கி இளைப்பாறி எமது தலைமுறைகளும் காலம் கழித்துக் கழக வளர்ச்சியைக் காப்போம் இது வரலாறு கூறும் வாய்மையய்ன்மீர்! பெண்ணின் வயிற்றிலே பிறப்பவன் எவனும் ஒரு நாள் மண்ணின் வயிற்றிலே இரண்டறக் கலப்பது தமிழ்ப் பண்பாடு எரியில் கலப்பது பார்ப்பனக் கலாச்சாரம். நீங்கள் இருவரும் தமிழ்ப் பண்பாட்டு நாகரீகத்திற்கு வழி காட்டி விட்டீர்களே பின்பற்றுமாதிராவிடர் இனம்? பிறப்புக்குப் பின் இறப்பு இறப்புக்குப் பின் அவரவர் வாழ்க்கைப் புகழின் எச்சம். அதை நிலை நாட்டிட அவரவர் பெற்றோர்களிட்ட பெயர்களே சான்று. ஈரோடு என்றால் ஈ.வெ.ரா. காஞ்சி என்றால் அண்ணா , என்று இரண்டு மாணிக்கக் கற்களின் ஒளிச் சிதறல்க்ளே அவரவர் புதை குழிகளையும் மீறி இன்றும் புகழொளி களாகப் படர்ந்து கொண்டிருக்கின்றன. இதைத்தான் திருவள்ளுவர் பெருமான், "நெடுநல் உளனொருவன் இன்றில்லை எண்ணும் பெருமை உடைத்தில் வுலக" என்றார். குறள் - 336 அதாவது 'நேற்று ஒருவர் இருந்தார். இன்று அவர் இல்லை என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம் என்பது தமிழ் வேதத்தின் பொய்யா மொழி. அதற்கேற்ப புகழ் வாழ்க்கை யோடு உலகில் வாழ்ந்து .ெ க | ண் டி ரு க் கிறார் க ள் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இல்லையா கழக நண்பர்களே
- . 3- ) à
"எங்களுடைய பொது வாழ்க்கைக் கனிகளை கொத்தும் அனுபவக் கிளிகள், காயங்களின் சிவப்பு வண்ணத்தைக் கோவைப் பழங்களாக எண்ணி நாள்தோறும் ஆழமாக்கிக் கொண்டே இருக்கின்றன. தந்தை பெரியார் அவர்களே அறிஞர் அண்ணா அவர்களே, அந்த அனுபவக் கிளிகள் உருவாக்கும் வலிகளை மறக்க, உங்களுடைய, உழைப்பெனும் புல்லாங்குழலோசை நினைவுகளையே இராகமாலிகை களாகப் பாவித்து ஆறுதலும் தேறுதலும் பெற்று வாழ்ந்து வருகின்றோம். வாழ்க்கைத் தடாகத்திலே மழைக் காலச் சொறியன்களைப் போல உங்களுடைய அன்பை, அறிவை, ஆற்றல், நீங்கள் பிறந்த செப்டெம்பர் திங்களிலே தலைதூக்கி, வான் நோக்கி, தந்தை பெரியார் வாழ்க, அறிஞர் அண்ணா வாழ்க, என்ற குரலொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கின்றோம். - எங்கள் காலண்டரை உருவாக்கிய ஜூலியஸ், சீசரும், அகஸ்டஸ் சீசரும், கிரிகோரி காலண்டர் பாதிரியும் வியந்து கொண்டே விண்மூச்சு விடுகின்றார்களோ என்னவோ - சரியான செப்டெம்பர் கொள்கைப் பைத்தியங்களென்று? எங்களுக்கும் ஒரு நாள் விழா நடக்கும் ஊர்வலம் போகும் பாதைகளில் கொள்கை மனங்கள் பவனி வரும் : அந்த நாள் எமது ஆயுள் நாடகத்தின் கடைசிக் காட்சி ; உறவரங்கப் பிரிவு நாள் : உயிர் நாடியெனும் சுருதி அடங்கிய நாள் எந்த நாளோ, 24 1-15 நவம்பர் 2006