சர்ச்சைகள் ! புலவர் என்.வி. கலைமணி క வணி வாழ் மக்களுக்காக, அய்யன் |(ئي திருவள்ளுவர் பெருமான் தமது சிந்தனைச் செல்வங்களை திரட்டிச் சேகரித்து வைத்துள்ள வாழ்வியல் மானப்புதையல் திருக்குறள். அத்திருக்குறளில் "ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலுங் கரி." குறள் 25 என்பது ஒரு குறட்பா இக் குறட்பாவுக்குரிய மரபுரை சுருக்கத்தை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் எழுதுகின்ற போது 'ஐம் புலன்களையும் அடக்கின முனிவரது வலிமைக்கு அகன்ற வானத்துள்ள தேவர்களுக்கு அரசனாகிய வேந்தனே' (இந்திரனே) போதிய சான்றாளனாம்" என்று குறிப்பிட்டுள்ளார். - இலக்கிய ஆய்வுத் துறைச் சிகரங்களில் ஒரு முகடாக காட்சித் தருகின்ற பாவாணர் பெருமகனார். அவர்களே, இந்த 25 ஆவது குறட்பாவிற்கு இதுதான் எனது திட்டவட்டமான முடிந்த முடிவு கருத்து என்று இறுதியை அறுதியிட்டு உறுதியாகக் கூறாமல், "சான்றாளனாம்" என்று "ஆம்" போட்டுத் தனது உரையை உரைத்திருக்கிறார். எனவே பரிமேலழகர் உரை அவருக்கு உடன்பாடல்ல என்று புரிகிறது. பாவாணர் கூறியது மரபுரை ஆனால் திருக்குறளுக்கு உரை கண்ட அறிஞர்கள் அவரவர் மதம், சமயம் சாதி, அரசியல் கட்சிகள் ஆத்திக, நாத்திக கண்ணோட்டங்களோடு திருக்குறளை நோக்குவதால், கூறும் உரைகளால், நாட்டில் அறிவுச் சர்ச்சைகள் எழுந்து மக்களைக் குழப்பக் கடலில் தள்ளித் தத்தளிக்க வைக்கின்றன. அந்த சர்ச்சைகள் அனைத்தையும் விரித்தால் கட்டுரை நீளும் விரிவஞ்சிய சுருக்கம் இவை : இந்திரன் என்பவன் தேவர்க்கு அரசனான இந்திரன் என்றார் பரிமேலழகர். காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் பூசாரியாக இருந்த ஒருவர் திருக்குறளின் பல இடங்களில் தமது வைதீக மதப் பண்டை புகுத்தி எழுதிய சாதிவெறி ஆய்வை மட்டும் நாம் நீக்கி விடுவோமானால், இன்று வரை இந்த அற்புத உரை போல வேறோர் உரை வந்ததில்லை இனியும் வராது என்பது உறுதி அவ்வளவு இரு மொழிப் புலமை உரை பரிமேலழகர் உரை. பரிமேலழகர் உரை மீதே சுவடு பதித்து எழுதிய உரை திருக்குறளார் வீ. முனுசாமி உரை. அவரும் வானவர் கோமான் இந்திரன் என்கிறார் தனது உரையில் திருவள்ளுவர் பெருமானுக்கு அவரது பெற்றோரிட்ட பெயரே என்னவென்று தெரியாமல் இருப்பதைப் போலவே, সAzক্ট AকW. 49 ஒரு பழைய திருக்குறள் உரையாசிரியர் பெயரும் தெரியவில்லை. அவர் 'வேதங்களில் கூறப்படும் இந்திரனும், திருவிளையாடல் புராணத்தில் வரும் இந்திரனும் இருவரும் ஒருவரோ என அறிய முடியவில்லை" என்று கூறியுள்ளார். "வானவர் கோமான் இந்திரன் ஆண்ட அமராவதி என்னும் பட்டிணம் தென்னாட்டிலேயே உள்ளது. அகலிகை, இந்திரன் முதலியவர்களை பற்றிய பழங்கதைகள் தமிழ்நாட்டுக் கோயிற் சுவர்களிலே எழுதப் பட்டிருந்த செய்திகள், 'பரிபாடல்' என்ற, சங்கக் கால நூலில் காணப்படுகின்றது" என்று அதே பழைய உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். புலவர். என்.வி.கலைமணி கள்ளக் குறிச்சி நகரம் உயர்நிலைப் பள்ளியில் 1972 - ஆம் ஆண்டு உவமைக் கவிஞர் சுரதா தலைமையிலும், பனப்பாக்கம் கவிஞர் கு. சீதா முன்னிலையிலும் தென்னாற்காடு மாவட்டம் கவிர் பெருமன்றம் விழாவில் 'மணிமேகலை காப்பியம் பற்றி ஓர் ஆய்வுரை ஆற்றும் போது, "சீத்தலைச் சாத்தனார் கவிஞர் பெருமகனார் சுட்டப்பட்ட இந்திர விழா எழுந்த காதை'யில் வரும் இந்திரன் யார் ? என்று கூற முடியவில்லையே என்று அன்று குறிப்பிட்டார். அந்த இந்திரன் யார் ? என்ற வினா இன்றும் மரண மூச்சு விடுத்துக் கொண்டிருக்கிறது திருக்குறளில் வரும் மூன்றாவது அதிகாரமான "நீத்தார் பெருமை"யை, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தனது உரையில், "துறந்தார் சிறப்பு" என்று பெயரிட்டுள்ளார். 'பொது நல நோக்கோடு இல்லறம் நலம் முழுவதையும் துறந்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான நோன்புகள் பலவற்றையும் நோற்றுத் தன்னலம் துறந்து வாழ்பவர்களது பெருமையைத் துறந்தார் சிறப்பு என்கிறார் நாவலர். திருக்குறள் 25-வது 'பா'வில் வரும் ஐந்து அவிந்தான் ஆற்றல்" எனும் சொற்றொடர்களுக்கு ஐந்து புலன்களாகும். அவாக்களை கட்டுப் படுத்தி அடக்கியவனுடைய வல்லமைக்குப் பரந்த வான் புகழ் கொண்டோரின் மிக உயர்ந்தோனாகக் கருதப்படும் இனிய, திறமை மிக்க அறிவாற்றலில் சிறந்த சான்றோனாகக் கருதப்படும் அறிவனே தக்க சான்றாவான். என்று தனது பொழிங்புரையில் அவர் கூறுகிறார் 'அகல் விசும்புளார் கோமான், பரந்த வான் புகழ்க் கொண்டோரின் மிக உயர்ந்தோர் இந்திரன் இந்திறன் இனிய திறமை மிக்க அறிவன் 'ற' கர, ர கரப் போலியாகவும் கொள்ளப்படும் பாட வேறுபாடாகவும் கருதப்படும் என்கிறார் நாவ்லர். ટ}હંઉા-ળvy 2006
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/23
Appearance