பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைபெற்ற சிலையாகி, நெடும்புகழை நிலைநிறுத்தி, அலைபோன்ற தமிழ்மக்கள் நெஞ்சங்களிலெல்லாம் இடம்பெற்ற பாவேந்தரே! புரட்சிக் கவியே! நின் நாக்கு ஞானத்தகடு நின் எழுதுகோல்-வைரக் கோல் நின் ஏடு-தமிழ்நாடு! சந்தனத்தில்உளிபட்டு,சந்திரனில்வதனம் தீட்டி, கருநாவற் கனியெடுத்துக் கண்ணாக்கி, தந்தும் கிளி நடையை-நடையாக்கி, சங்கத்தைக் கண்டமாக்கி, - கவிதையிலே தமிழ்க் கன்னியை, உறவாக்கிய கவிமாமன்னா! தமிழர் தம் மொழிவிளக்கே! காலத்தின் அணுக்களிலே-நின் கை வண்ணம் காணுதய்யா! ஓடிய தமிழ்க்குருதி இடையிலே இறுதி பனிப்பாறையாகி சங்கை கெட்ட நிலையிலே சங்கங்களை வளர்த்த தமிழகம், பொங்கும் வாரிக்கு முன்னாலே புலம்பி நின்றது மின்னலை இழுத்து மலைபிளக்கும் மேகம்போல், கன்னல் தமிழ் இழுத்து, தமிழை நீர்-நிமிர வைக்கப் பாட்டெழுதிய-குயில் புள்ளே! வரலாறு மறவா வடிவமே! நிலவைத் திறந்துவிட-வானம் வரும்! மலரைத் திறந்து விட-தென்றல் வரும் பகலைத் திறந்து விட-பரிதி வரும் எமது உணர்வைத் திறந்துவிட-நீ வருவாயே! சாப்பாறை, இந்நிலை சந்தனத் தமிழெடுத்து, தமிழ்த்தீயில், இந்தனமாக்கிய-இலக்கியக் குரவ, உன்னோடு நாள் போயிற்றா? இனிவரும் நாளெல்லாம் தமிழ் இல்லா நொடிக் கினையா? பார்த்திருந்த ஓவியத்தை பதம் குலையச் செய்ததெல்லாம், காலமெனில், அக்காலம் எமக்கு வேண்டா! நடப்பதற்கே தெரியாத குழந்தைகள்-நாங்கள நல்லதமிழ்நடைகற்பித்த நயமான -ஆசான்நீர்! இடையன்கோலெடுத்தால்-அது குத்துக்கோல்! மன்னன் கோலெடுத்தால்-செங்கோல்! குருடன் கோலெடுத்தால் வழிக்கோல்!ஆனால், மக்களுக்காக நீரெடுத்தக் கோல்-பாக்கோல்! பாவேந்தே-நீர் அடுக்கிய எழுத்துகளிலே இருந்தமிடுக்கென்ன? அறிவுக்கிகA இ. (3LD, 2006