கொடுத்த உவமையில் இருந்த உணர்வென்ன? இனி, யார் எமக்கு அதுபோலத் தரப்போகிறவர்கள் யார் இருக்கிறார்கள்? தோகை விரித்த தொகைக் கூட்டம், வெட்டுக்கிளிபோல் துள்ளி வந்த வீரச்சொற்கள்! விநோத விளக்கங்கள் அரிமா போல் அறையும் நின் அறைகூவல்கள் வேங்கைபோல் பாயும் முன்னேற்றப்பாய்ச்சல் மரம் பொழியும் தமிழ்த் திமிர்கவிதைச் செருக்கு இத்தனையும் உன்றன்பாடலிலே, குடிபுரியக் கண்டோம்! இனி அந்த ஞான மரத்தை யாரிடம் காண்போம் ஐயா! பொங்கும் தமிழ் உணர்வில் பூரித்த தன்மானப் பூக்களைத் தங்களது கவிதையெனும் நறுமலர்த்தோட்டத்திலே கண்டோமே! ஏறுபோய நீ. ஏடா தம்பி, எடடா பேனா, என்று எமை எழுத நீ ஏவியபோது, வந்து விழுந்த உமது வாத வரிகளில் எல்லாம் வரிப்புலியின் நடையைப் பார்த்தோமே! வெல்லத் தமிழ் மட்டும் உம்முடைய கவிதைகளில் வீச்சாக இனிக்கவில்லை; கொல்லும் தமிழ்வேல், வாள், ஈட்டிகளும் ஓசை நயம் செய்தன! ஓங்காரக் கூச்சலிட்டன! மின்னல் வரிகளாக மின்னி மின்னி-எமக்கு இருளில் நீர் காட்டிய வழியை எப்படி ஐயா மறப்போம்! வேங்கையின் வாகார்ந்த உமது வீரநடையிலே-கவிதைக் கர்ச்சனையிலே வெண்டைக் கவிதை எழுதிடும் சில வெள்ளாடுகள் குறை கண்டன. மேய்ந்த நுனிப்புல்மேடபுத்தி அவற்றுக்கு: ஆத்திகத்திற்குப்பாதம் தூக்கும் அந்த அடிமைகள் உமை எதிர்த்து "இல்லை என்பான் யாரடா? தில்லையைப் போய்ப் பாரடா என்று ஆவர்த்தன மாடின! "இல்லை என்பன்ே நானடா, அத் தில்லை கண்டதானடா, என-நீர் எதிரடி முழக்கமிட்டதைக் கண்டு 'கவிகள் எல்லாம் கிடைத்தக் கிளைகளை இறுகப்பற்றித்தலை கீழாய்த் தொங்கி ஊஞ்சலாடியே காலத்தைக் கண்டு விலாநோகச் சிரித்ததே தமிழ்நாடு! கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுதென்ற விடுதலைமுழக்கக் கவிதைகள் விதியுலாவந்தன! சமுதாய விரோதிகளை வீதியிலே நிறுத்த, கொலை வாளினை எடடா, மிகு கொடியோர்செயல் அறவே, குகைவாழ் ஒரு புலியே உயர்குணமேவிய தமிழா?- என்ற வீர அணிவகுப்பு நடைப்பாடலைப் பாடி, எமது நாடி நரம்புகட் கெலாம் முறுக்கேற்றிய புரட்சிக் கவிஞரே மறப்போமாயாம் உமை! அரசியல் விடுதலைக்குப் பாரதியார் கவிதை எழுதினார் சமுதாய விடுதலைக்கு உமைப்போல் எழுதினவர் யார்? எவர்? உதாரணத்துக்காகஒருவிரலைமடக்கஉண்டாஆள்? ஆயிரக் கணக்கான கவிதைகளால் இராமாயண இராமனைப் பாடிட ஆயிரம் கவிஞர்கள் பிறந்தார்கள். இராவணன் மறத்தை, திறத்தை மாண்பைப்பாட ஒரு கவிஞன் பிறந்தானா?உம்மைத் தவிர! 'தென்திசையைப் பார்க்கின்றேன், என் சொல்வேன்-என்றன் சிந்தையெல்லாம், தோள்களெல்லாம் பூரிக்கு தடடா" குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையன், குள்ள நரிக் கூட்டத்தின் கூற்றம் ද් Y)§4, § §. *溪逢遴逢 \\ o \l/ ২% மே, 2ΟΟ6 .%\ مست. སྤོང་ ཚེ་སྤོང་ན་མ་འ་༤, ) ལ་རྩོམ་དེའི་ངོ་
பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/27
Appearance